லிலே ஆதிகாலத்திலே(அதனைக்)கடையும்படி நீட்சியையுடைய திருமால் போகட்ட (மத்தாகிய) பெரிய மந்தரமலையைப்போன்றான். உபமானத்தில்'மதிக்கும்படி'என்றதனால்,உபமேயத்திலும் அச்சேனையைக்கலக்கும்படி யென்க. உதிக்குஞ்சுடரென்றது, இளஞ்சூரியனை. சுடர் ஓராயிரம்-இல்பொருளுவமை. இனி, உதிக்கும்சுடர் ஓர் ஆயிரம் உருக்கொண்டென என எடுத்து, பாலசூரியன் தான் மிகப் பலவான வடிவங்களைக் கொண்டாற்போல என்றும் உரைக்கலாம். ஒளிகூர்விச்சாதரரென இயையும். விதிப்பவன், விதி;விதித்தல் - சிருஷ்டித்தல். விச்சாதரர் - வடசொற்றிரிபு. குமரன்=குமாரன்: குறுக்கல். நெடுமால் - திரிவிக்கிரமாவதார காலத்தில் நீட்சிபெற்ற வடிவத்தையுடைய கடவுள்;அன்றிக்கே, மிக்கிமகிமையுடையபிரானுமாம். உபமேயமாகிய சேனையில் ஆரவாரமுண்மையின், உபமானமான கடலை 'குரை' என விசேடித்தார். கடல்முன் என எடுத்து, கடலிலேயென்றுமாம்;முன் - ஏழனுருபு. (525) 24.-பகைச்சேனையைத்தொலைக்க,வீமன் அம்புகள் தொடுத்தல். ஊழ்வந்துதனெதிருந்தலு முயர்வானுலகுறுவான் சூழ்வந்தபெருஞ்சேனையைத்தொலையாவமர்பொருவான் காழ்வந்தகதாபாணியுங் காணார்முனைக்கென்றும் வீழ்வந்தகொடுஞ்சாயகம் வின்னாணில்விசித்தான். |
(இ-ள்.)ஊழ்-முற்பிறப்பிற்செய்த வினைப்பயன்,தன் எதிர் வந்து உந்தலும் - தனதுஎதிரில்வந்து ஏவியதனால்,உயர் வான் உலகு உறுவான் - சிறந்ததேவலோகத்து வீரசுவர்க்கத்தை அடையும்பொருட்டு, சூழ்வந்த- (தன்னை)வந்துவளைந்த,பெரு சேனையை-பெரியசைனியத்தை,தொலையா அமர் பொருவான் - அழித்துப் போர்செய்யும்பொருட்டு, காழ் வந்த கதா பாணிஉம் - உறுதிமிக்க கதாயுதத்தை யேந்தின கையையுடைய வீமனும், காணார் முனைக்குஎன்றுஉம் வீழ் வந்த கொடு சாயகம்-பகைவர்களது போருக்கு எப்பொழுதும் அழிவுசெய்வதாக(த் தனக்குப் பழக்கத்தில்) வந்த கொடிய அம்புகளை,வில் நாணில் விசித்தான் - வில்லினதுநாணியினால் இழுத்து விட்டான்;(எ-று.)-'தொலையாவமர்புரிபோர்'என்றும் பாடம். சேனைகள்வீமனைச்சூழ்ந்ததுஅச்சேனைகளுக்கேஅழிவை விளைப்பதென்பார்,'ஊழ்வந்துதனெதிருந்தலுமுயர்வானுலகுறுவான் சூழ் வந்த பெருஞ்சேனை'என்றார். ஊழாவது-முற்பிறப்பிற் செய்த நல்வினை தீவினைப்பயன் தன்னைச்செய்த உயிரையே பிற்பிறப்பில் தவறாதுசென்று அடையவேண்டும் நியதி. தொலையாஅமர்பொருவான் - அமர்பொருது தொலைப்பானெனக் கருத்துக் கொள்க. தொலையா- உடன்பாட்டிறந்தகாலவினையெச்சம்: விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. காணார்- (தன்னைஅன்போடு) காணாதவரெனப்பகைவர்க்குக் காரணக்குறி. வீழ் - வீழ்ச்சியை விளைத்தல்: |