பக்கம் எண் :

340பாரதம்ஆரணிய பருவம்

தது.  முனைவர்-போர்களத்தில்வருபவ ரெனப் பகைவர்க்கு ஏதுப்பெயர்;
முனைவோரென்றாயிற்று: முனை-போர்க்களம். ஆஹவம்-வடசொல்.
தன்னுடையாற்ற லுணராரிடையினும், மன்னிய அமரிடை
வெல்லுறுபொழுதினும், தன்னைமறுதலைபழித்தகாலையும்,
தன்னைப்புகழ்தலுந்தகும் வல்லோர்க் காதலின், இங்ஙனம் இப்பொழுது
வீமன் தன்னைச்சிறப்பித்துக்கூறினான். உலகுய்த்திடு புகழோன் என்றும்
பாடம்.                                                  (529)

28.-மீண்டும்தாமரைப்பூவைக்கொடுத்தால்
உங்களுயிரை விடுவேனென்று வீமன் கூறல்.

மருவீசுபொலந்தாமரை மலரின்னமு மொருகால்
தருவீரெனிலுமதாருயிர் யானுந்தருகுவனால்
பொருவீரெனில்யமனார்பதிபுகுவீரினி யென்றான்
ஒருவீரருமுவமைக்கெதி ரில்லாவிறலுரவோன்.

     (இ-ள்.)'இன்னம்உம்ஒருகால்-(முன்ஒரு தரம் ஒருவகைப் பூவைக்
கொடுத்ததுபோல) இன்னுமொருமுறை, மரு வீசு பொலம் தாமரை மலர்
தருவீர் எனில்-வாசனையைவீசுகின்றஅழகிய தாமரைப்பூவை (இப்பொழுது
எனக்கு நீங்கள்) கொப்பீர்களாயின், உமது ஆர் உயிர் யான்உம் தருகுவன்-
உங்களது அருமையான உயிரை நானுங் கொடுப்பேன்;(அப்படி யல்லாமல்),
பொருவீர் எனில் - போர்செய்வீர்களாயின், இனி-இப்பொழுதே, யமனார்
பதி புகுவீர் - யமலோகத்தைச் சேர்வீர்கள் [இறப்பீர்கள்],'என்றான்-
என்று (சாலேந்திரன் முதலியோரை நோக்கிக்) கூறினான்: (யாரெனில்),
ஒருவீரர்உம் உவமைக்கு எதிர் இல்லா விறல் உரவோன் - (உலகத்தில்)
ஒருவீரரும் (தனக்கு) உவமையாதற்கு எதிரில் நிற்கப்பெறாத வெற்றியையும்
வலிமையையுமுடைய வீமன்;(எ-று.)

    முதலிரண்டடிகளில் ஒன்றற்கொன்றுதவியணியும்.  மூன்றாமடியில்
பிறிதினவிற்சியணியுங்  காண்க.  யமன் என்று சொல்லுக்கு -
(எல்லாவுயிர்களையும்அடக்குபவ னென்றுபொருள்;இங்கே, ஆர் என்னும்
பலர்பால் விகுதி-அவனதுகொடுமையை விளக்குதற்கு வந்தது.       (530)

வேறு.

29.-அம்மொழிகேட்டுச் சாலேந்திரன் சினங்கொள்ளல்.

என்றுவய மாருதியி சைத்தமொழி கேளா
வென்றிதிகழ் வாகைபுனைவிஞ்சையர்பி ரானும்
குன்றனையதோளிணைகுலுங்கநகை செய்யாக்
கன்றினன்வெ குண்டுகனல் காலுமிரு கண்ணான்.

மூன்று கவிகள் -குளகம்.

     (இ-ள்.) என்று-,வய மாருதி-வலிமையையுடைய வீமன், இசைத்த -
சொன்ன, மொழி - வார்த்தையை, கேளா - கேட்டு,-வென்றிதிகழ் வாகை
புனைவிஞ்சையர் பிரான்உம் - சயத்துக்கு