பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்341

அடையாளமாய்விளங்குகின்ற காட்டுவாகைப்பூமாலையையணிந்த
வித்தியாதரர்தலைவனானஅந்தச்சாலேந்திரனும், குன்று அனைய
தோள்இணைகுலுங்க - மலையையொத்த(தனது) இரண்டுதோள்களுங்
குலுங்கும்படி, நகை செய்யா - சிரித்து, கன்றினன் - மனம் வெதும்பி,
வெகுண்டு-கோபித்து, கனல் காலும் இருகண்ணான்-நெருப்பையுமிழும்
இரண்டுகண்களையுமுடையவனாய்,-(எ-று.)-'கண்ணான்'என்னுங்
குறிப்புமுற்றெச்சம், மேல் முப்பத்தோராம் பாட்டிலுள்ள 'உரைத்து'என்னும்
வினையெச்சத்தைக்கொண்டு முடியும். 

     இதுமுதல் இருபதுகவிகள்-இச்சருக்கத்து முதற்கவிபோன்ற
கலிவிருத்தங்கள்.                                         (531)

30.-வீமனைநோக்கிச் சாலேந்திரன் கூறும் வார்த்தை

தேனிடறுவாசமிகு தெய்வமலரென்னே
மானுடர்கள்சூடவரு வார்கண்மதியற்றோய்
கானுடையவாழ்க்கைபுரி நின்னுயிர்கணத்தென்
ஊனிடறுவாளிக டமக்குணவளிப்பேன்.

     (இ - ள்.)'மதிஅற்றோய்-அறிவில்லாதவனே!தேன் இடறு -
வண்டுகள் மேலேவிழுந்துமொய்க்கத்தக்க, வாசம் மிகு - நறுமணம் மிகுந்த,
தெய்வம் மலர் - தேவர்களுக்குரிய இப்பூவை, மானுடர்கள்-மனிதர்கள், சூட
வருவார்கள் - தலையிலணிந்துகொள்ளவருவார்கள் (என்பது), என்னே-
என்ன ஆச்சரியம்! கான் உடைய வாழ்க்கை புரி நின் உயிர்-வனத்தை
இடமாகவுடைய வாழ்தலைச்செய்கின்ற நினது உயிரை, கணத்து-
கணப்பொழுதினுள்ளே, என்-என்னுடைய, ஊன் இடறு வாளிகள் தமக்கு-
(பகைவர்களது) தசைதோய்ந்தஅம்புகளுக்கு, உண-உண்ணும்படி,
அளிப்பேன் - கொடுப்பேன்,'(எ-று.)

     உன்னைஎன் அம்பாற் கொல்வே னென்பதாம்.  தேன்இடறு-மது
நிறைந்த என்றுமாம்.  கானுடையவாகை என்றும் பாடம்.         (532)

31.-சாலேந்திரன்சேனாவீரரைநோக்கி
'படைதூவிவீமனைப்பற்றுக'எனல்.

மற்றிவன்வெகுண்டிவை யுரைத்துவருசேனைக்
கொற்றவரைநின்றுநனி கூவியெதிரேவிச்
சுற்றுமிகல்வெம்படைக டூவியிகலோனைப்
பற்றுமின்விரைந்தினி யெனப்பகரலுற்றான்.

     (இ - ள்.)இவன் - இச்சாலேந்திரன், வெகுண்டு - கோபித்து, இவை
உரைத்து - இவ்வார்த்தைகளைக்கூறி, நின்று - (அங்கு) நிலைநின்று, வரு
சேனைகொற்றவரை நனி கூவி - (தன்னுடன்) வந்த சேனையிலுள்ள
வீரர்களைமிகுதியாக அழைத்து, எதிர் ஏவி-(வீமனுக்கு) எதிரிலே செலுத்தி,
'இனி- இப்பொழுது, சுற்றுஉம் இகல் வெம் படைகள் தூவி-(அவனைச்)
சுற்றிலும் வலிமையையுடைய