பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்343

34.-வீமன் மாறாகக்கணைசெலுத்திநகைத்திருத்தல்.

தொடுத்தசரவார்சிலைதுணிந்துநனிமேன்மேல்
விடுத்தபடையும்பொர வெகுண்டுமுனைவாய்வந்து
அடுத்தவர்கடோளுமணி மார்புமிருதாளும்
நடுத்தறியவெங்கணையுகைத்தனனகைத்தான்.

     (இ - ள்.)தொடுத்த சரம் வார் சிலைதுணிந்து - (தன்மேல்) எய்த
அம்புகளையுடையநீண்ட (பகைவர்களின்) விற்கள் துணிபட்டு, நனி மேல்
மேல் விடுத்த படைஉம் பொர-(அவர்கள்) மிகுதியாகத் தன்மேலேமேலே
பிரயோகித்த ஆயுதங்களும் (மீண்டு சென்று அவற்றைவிடுத்தவர்களையே)
தாக்கவும், வெகுண்டு முனைவாய்வந்து அடுத்தவர்கள் தோள்உம்
அணிமார்புஉம் இரு தாள்உம் நடு தறிய - கோபங்கொண்டு
போர்க்களத்திலே எதிர்த்துவந்து சேர்ந்த அவ்வித்தியாதரர்களுடைய
புயங்களும் அழகிய மார்பும் இரண்டுகால்களும் நடுவிலே முறிபடவும்,
(வீமன்), வெம் கணைஉகைத்தனன் - கொடிய அம்புகளைச்
செலுத்தினவனாய்,நகைத்தான்-சிரித்தான்;(எ-று.)

     தொடுத்தசரவார்சிலையென்றது, வடமொழிநடை;சரந்தொடுத்த
வார்சிலையென்க.  முனைவாய்,வாய்-ஏழனுருபு.             (536)

35.-நான்குகவிகள்-சாரணர் வீமனுடன் கதாயுத்தம்
புரிந்து,இறந்தவர்போக, மற்றையோர் தோற்றோடினமை
கூறும்.

மண்டுதிறல்விஞ்சையர் மடிந்தசெயல்யாவும்
கண்டுசிலசாரணர் கறங்கனையதேர்மேற்
கொண்டுகடலென்ன வுருமென்னநனிகொதியாத்
தண்டுகொடெதிர்ந்தனர்க டண்டதரனோடும்.

     (இ - ள்.)மண்டு திறல் விஞ்சையர் - மிக்கவலிமையையுடைய
வித்தியாதரர்கள்,  மடிந்த செயல் யாஉம் -(இங்ஙனம்) இறந்த
செய்திகளையெல்லாம்,கண்டு - பார்த்து, சில சாரணர் - சாரணரென்னுந்
தேவசாதியார் சிலர், கறங்கு அனையதேர் மேற்கொண்டு -
காற்றாடியையொத்த[விரைவையுடைய](தத்தம்) தேர்மே லேறிக்கொண்டு,
கடல் என்ன-(பொங்குகிற) கடல்போலவும், உரும் என்ன-(முழங்குகிற)
இடிபோலவும், நனி கொதியா-மிகுதியாகக் கோபித்து, தண்டு கொடு -
கதாயுதத்தைக் (கையில்) ஏந்திக்கொண்டு, தண்டதரனோடுஉம்-
(சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தைத் தரிப்பனனானஅவ்வீமனுடனே,
எதிர்ந்தனர்கள்-;(எ - று.)

     தண்டதரன் -ஆஜ்ஞாதண்டத்தை [செங்கோலை]த்தரிப்பவனென்றும்
பொருள் கொள்ளலாம்.                                        (537)

36.வார்சிலையொழிந்துவிறன்மன்னுவயவாகைப்
போர்செய்கதைகொண்டெதிர் புகுந்துபொரலுற்றான்