பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்345

தலையும்துண்டுபட்டுத்தனித்தனியாக, பட்டவர் - இறந்தவர்கள், திறல்
இயக்கர் குலம் - வலிமையையுடைய யக்ஷரது இனத்தவரான சாரணருள்,
எனைபலர்-எத்தனையோபலர்! [மிகஅநேக ரென்றபடி];படாதவர்
எல்லாம்-இறவாது எஞ்சினவர்கள் எல்லோரும், விடாது-தவறாமல்,அன்று -
அப்பொழுதே, புறம் இட்டனர்-முதுகுகொடுத் தோடினார்கள்;(எ - று.)

    தண்டு+அமர்=தட்டமர்;மென்றொடர்வேற்றுமையில் வன்றொடராயிற்று.
தநு - வடசொல்.  பின் சிரமென்றதனால்,முன் தநு என்றது -
தலையொழிந்தஉடலை. மட்டு அவிழ்தல் -தேன்பெருகுதலுமாம்.     (540)

39.-விஞ்சையர் வீமனால்தோற்ற வகை.

தொடிக்கரமிழந்திரு துணைப்புயமிழந்தாங்கு
அடிப்பதமிழந்தவ யவங்களடைவேபோய்
இடிக்குரலின்விஞ்சைய ரெதிர்ந்தயரவாங்கே
கொடிக்குடரிழந்தனர் மருத்துதவுகூற்றால்.

     (இ - ள்.)ஆங்கு-அப்பொழுது, இடி குரலின் விஞ்சையர்-இடி
முழுக்கம்போன்ற கண்டத்தொனியையுடைய வித்தியாதரர்கள், எதிர்ந்து-
வீமனெதிரிற்சென்று பொருது, மருத்து உதவு கூற்றால்-வாயுபகவான்பெற்ற
யமனோடொத்தஅவ்வீமனால்,ஆங்கே - அப்பொழுதே, தொடி கரம்
இழந்து-தொடியென்னும் வளையையணிந்த(தங்கள்) கைகளைஒழிந்து, இரு
துணைபுயம் இழந்து - (ஒன்றோடொன்றுஒத்த தமது)
இரண்டுதோள்களையும்ஒழிந்து, அடி பதம் இழந்து-(எல்லா
அவயவங்களுள்ளுங்) கீழுள்ள கால்களையும்ஒழிந்து, அவயவங்கள்
அடைவுஏ போய்-(இங்ஙனமே) மற்றையுறுப்புக்களும் முறையே யொழிந்து,
அயர-மரணமுண்டாக, கொடி குடர் இழந்தனர்-கொடிபோன்ற வடிவமுடைய
(தமது) குடல்களையும்ஒழிந்தார்கள்;(எ - று.)

    குடர்-ஈற்றுப்போலி.  கூற்று-உவமையாகுபெயர். 'மருத்துதவுகூற்று'
என ஒருதிக்பாலகனைஒருதிக்பாலகன்மகன்போலக்கூறியது, கவிசாதுரியம்.
                                                      (541)     

40.-அரக்கரும்இயக்கரும் சதுரங்க சேனையுடன்
வீமனைவளைத்தல்.

அன்னநிலைகண்டடலரக்கரொடியக்கர்
பின்னருமெனைப்பலர்பிறங்கலைநிகர்க்கும்
கன்னமதமாவிரத கற்கியிகல்காலாள்
மன்னுதிறன்மானுட மடங்கலைவளைத்தார்.

     (இ - ள்.)அன்ன நிலைகண்டு - (இங்ஙனம் வித்தியாதரர்கள்
சிதைந்த) அந்த நிலைமையைப்பார்த்து, அடல் அரக்கரொடு இயக்கர்-
வலிமையையுடைய இராக்கதர்களும் யக்ஷர்களும், பின்னர்உம் எனை