(இ-ள்.) சூலம்உம்-(தன்மேல் எறியப்பட்ட அந்தச்) சூலாயுதமும், தனதுமேல் சூலம்ஏவினோன்கோலம்உம்-தன்மேலே சூலாயுதத்தையெறிந்த அம்மணிமானது வடிவமும், பொடி பட-துகளாம்படி, மீளிஉம்- வீரனானவீமனும்,-கொதித்து- கோபித்து, மூல பங்கயம் மறை முனிவன் வாளியை-(பிரபஞ்சததோற்றத்துக்கு) ஆதிகாரணமான (திருமாலின்) நாபீகமலத்தில்தோன்றின வேதம்வல்லவனான(கடவுளைத் தியானஞ்செய்யுந்தன்மையுள்ள) பிரமதேவனது அஸ்திரத்தை, ஆலம்உம் குளிர்வு உற அழல - கொடிய விஷமும் சாந்தமடையும்படி கொதிக்குமாறு, வீசினான்-பிரயோகித்தான்; (எ-று.) ஆலம்-ஹாலம்;வடசொல். ஆலமுங் குளிர்வுற-இந்தஅஸ்திரத்தின் கொடுமைக்குமுன் விஷமுங் கொடுமையுடையதன் றென்னும்படி யென்க.(563) 62. | பிரமன்வெஞ்சரம்வலி பெற்றவிஞ்சையன் மருமமெங்கணுஞ்செறிந் துருவமாழ்கியே உருமின்வெங்குரலுட னொடுங்கிமண்மிசைக் கருமுகில்வீழ்ந்தெனக் கலங்கிவீழவே. |
இதுவும், மேற்கவியும்- குளகம். (இ-ள்.)பிரமன் வெம் சரம்-கொடிய அந்தப்பிரமாஸ்திரமானது, வலி பெற்ற விஞ்சையன் மருமம் எங்கண்உம் செறிந்து-வலிமையைக் கொண்ட வித்தியாதரனாகியஅம்மணிமானது மார்பு முழுவதிலும் பரவி, உருவ- அழுந்தித்தைத்துச்செல்லவே, (அவன்), மாழ்கி - மயங்கி, உருமின் வெம் குரலுடன் - இடிமுழக்கம்போன்ற கொடிய கண்டத்தொனியுடனே, ஒடுங்கி- நிலைதளர்ந்து, மண்மிசை-பூமியிலே, கரு முகில் வீழ்ந்து என-கரியமேகம் விழுந்தாற்போல, கலங்கி வீழ-பொறிகலங்கி விழுந்திட,-(எ-று.)- வீழவென்னும்வினையெச்சம்,மேற்கவியில் 'சாய்ந்தனர்'முதலிய முற்றுக்களோடு முடியும். பிரமன்சரம்-பிரமனைத்தெய்வமாகவுடைய அம்பு. மருமம்எங்கணும்- நெற்றி கண்டம் மார்பு முதலிய முக்கியஸ்தானங்கள் எல்லாவற்றிலும் என்றும் உரைக்கலாம்;மருமம்-உயர்நிலை. (564) 63. | அந்தரந்தரம்புக வனந்தரம்படைத் தந்திரத்தலைவருந்தளர்ந்துசாய்ந்தனர் உந்தினர்கரிபரி யிரதமூர்புக முந்தினதமதுயிர் கொண்டுமுந்தினார். |
(இ-ள்.)அனந்தரம் - பின்பு, அந்தரம் தரம் புக-தேவலோகமும் அச்சமடைய, படை-(அவ்வீமனது) ஆயுதங்களால், தந்திரம் தலைவர்உம்- (சாலேந்திரன் முதலிய) சேனைத்தலைவர்களும்,தளர்ந்து-நிலைகலங்கி, சாய்ந்தனர்-தோற்றவர்களாய், கரி பரி இரதம் உந்தினர்-யானைகளையுங் குதிரைகளையுந்தேர்களையுஞ்செலுத்திக்கொண்டு, முந்தின தமது உயிர் கொண்டு-(எல்லாப்பொருள்களினுஞ்) சிறந்த |