தத்தம் உயிரைஅழியாது உடன்கொண்டு, ஊர்புக-(தங்கள்நகரமான) அளகாபுரியினுட் செல்லுமாறு, முந்தினார்-(ஒருவரினும்ஒருவர்) முற்பட்டு ஓடினார்கள்;(எ-று.) தரம் -அச்சம்: வடசொல். அந்தர னந்தரம் புக என்ற பாடத்திற்கு- தீம்பனாகியமணிமான்வானுலகை யடைய என்க. (565) 64.-வென்றவீமசேனன் சிங்கநாதஞ் செய்தல். விரிதிரையுவரிநீ ரென்னவெஞ்சினக் கரிபரியாளெலாங் கலந்துகுத்தமெய்ச் சுரிபெருங்குருதியின் சுழலியாற்றினின்று அரிமகனடலரிநாதஞ்செய்யவே. |
இதுவும், மேற்கவியும்- குளகம். (இ-ள்.) விரிதிரை உவரி நீர் என்ன-பரவிய அலைகளையுடைய கடலின் நீர்போல (அளவின்றிப்பரந்த), வெம் சினம் கரி பரி ஆள் எலாம்- கொடிய கோபத்தையுடைய யானைகளும்குதிரைகளும் காலாட்களும் எல்லாம், கலந்து மெய்உகுத்த-ஒருங்கு உடம்பினின்று சொரிந்த, சுரி பெரு குருதியின்-(இடையிடையே) சுழிபடுந் தன்மையுள்ள பெரிய இரத்தவெள்ளமாகிய, சுழல் யாற்றில்-நீர்ச் சுழிகளோடு கூடிய நதியிடையிலே, நின்று-நிலைநின்று,அரி மகன்-வாயுகுமாரனானவீமன், அடல் அரிநாதம் செய்ய-வலியசிங்கநாதத்தைச்செய்ய,-(எ-று.)- 'வினவுற்றான்'என மேற்கவியில் இயையும். சிங்கநாதம்-சிங்கம் கர்ச்சிப்பதுபோன்ற கர்ச்சனை. உவரி- உவர்ப்புச்சுவையுடையது:இ-பெயர்விகுதி. சுழல்+யாறு=சுழலியாறு: தன்னொழிமெய்ம்முன்யகரம் வர இகரம் துன்னிற்று. (566) வேறு. 65.-இங்ஙன்இங்குநிகழஅங்குத்தருமன் வீமனைக்காணாது திரௌபதியைவினவல். இத்தலைவயவீம னிகல்பொரு திவணின்றான் அத்தலையுயிர்போலு மனுசனையெதிர்காணான் மொய்த்தலைதொறுமேறு முழுமணி முரல்சங்கம் செய்த்தலைதுயினாடன்றேவியை வினவுற்றான். |
(இ-ள்.) இ தலை- இவ்விடத்தில், வய வீமன் - வலிமையையுடைய வீமசேனன், இவண் - இவ்விதமாக, இகல் பொருது-போர் செய்து, நின்றான்- நிலைநின்றான்;(அப்பொழுது), அ தலை-அவ்விடத்தில்[பாண்டவர்களும் திரௌபதியும் வாசஞ்செய்யுங்காட்டில்]மொய்த்து அலைதொறும்ஏறும் முழு மணி முரல் சங்கம் செய்த தலைதுயில் நாடன் - நெருங்கி அலைகள்தோறும்மேலேமேலே தவழ்ந்து செல்கிற பெரிய முத்துக்களையுடையஒலிக்கின்றசங்குகள் |