குறைந்து மற்றைக்கலையொன்றையும்இழப்பதற்கு முன்னஞ் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன் தலையிலணிந்து மீண்டும் கலைகள்வளர்ந்து வரும்படி அனுக்கிரகித்தானென்பது, கதை: குருவாகிய பிரகஸ்பதி தனது மனைவியான தாரையைச் சீடனாகியசந்திரன் புணர்ந்ததனாற் சினந்து சபித்த சாபத்தாற் சந்திரன் கலைகள் குறைந்தானென்றுங் கதைகூறுவர். (45) 46.-இரண்டுகவிகள்-குளகம்: அருச்சுனன் தவஞ்செய்வது தெரிந்து இந்திரன் அவனைப்பரிசோதிக்கக் கருதியமை கூறும். நிரந்தரமநேகநாள் நினைவுவேறற உரந்தருபுலன்களை யொடுக்கியாயுதம் இரந்தனன்வரையிடை யியற்றுநற்றவம் புரந்தரனறிந்துமெய் புளகமேறவே. |
(இ-ள்.) (அருச்சுனன்), அனேகம் நாள்-பலநாள், நிரந்தரம்- இடைவிடாமல், நினைவு வேறு அற-(சிவபெருமானையொழிய) வேறு எண்ணம் இல்லாதபடி, உரம் தரு புலன்களை ஒடுக்கி-வலிமையைக்கொண்ட ஐம்புலன்களை யடக்கி, ஆயுதம் இரந்தனன்-பாசுபதாஸ்திரத்தை வேண்டினவனாய்,-வரையிடை-கைலாசமலையிலே (இருந்து), இயற்றும்- செய்கின்ற, நல் தவம்-சிறந்த தவத்தை, புரந்தரன்-(அவன் தந்தையாகிய) தேவேந்திரன், அறிந்து-தெரிந்து, மெய் புளகம் ஏற-(மகிழ்ச்சியால்) உடம்பு மயிர்ச்சிலிர்ப்பை அடைய,-(எ-று.)-'கூறி.....உன்னினான்'என்று மேற்கவியில் முடியும். இனி இச்செய்யுளை மேற்செய்யுளோடு ஒருதொடராகக் கொள்ளாமல் தனிநின்று முடிந்ததாகக்கொண்டு, அருச்சுனன் தான் வரையிடை இயற்றும் நல்தவத்தைப் புரந்தரன் அறிந்து மெய் புளகமேறுமாறு, அனேக நாள் நிரந்தரம் வேறு நினைவற உரந்தருபுலன்களையொடுக்கி ஆயுத மிரந்தனன் என அந்வயித்து உரைப்பாருமுளர். அந்தரம்-இடையீடு: நிரந்தரம்-அஃது இல்லாமல் என்க. புலன்களுக்கு உரமாவது-மனத்தைத் தம்வழியிலே யிழுக்குந் தன்மை. புரந்தரன்-பகைவருடைய உடலை அல்லது பட்டணத்தை யழிப்பவ னென்பது, அவயவப்பொருள். ஒருக்கி என்றும் பாடம். (46) 47. | குருவுடன்விரகுறக்கூறியீசனை மருவுறுகொன்றைநாண்மாலைமௌலியைக் கருமயில்பாகனைக் காண்டல்வேண்டிய திருமகன்றவநிலை தெரியவுன்னினான். |
(இ-ள்.) ஈசனை-(யாவர்க்குந்) தலைவனும், மரு உறு-வாசனை மிகுந்த, நாள்-புதுமையான (அன்றுமலர்ந்த), கொன்றை-கொன்றைப்பூக்களினால் தொடுக்கப்பட்ட, மாலை-மாலையைச்சூடிய, |