பக்கம் எண் :

360பாரதம்ஆரணிய பருவம்

ஒன்றியமுனிரோம னுரையெனுமமுதாலே
துன்றியதுனிதீராச் சோகமொடுரைசெய்வான்.

     (இ - ள்.)மன்னன்-யுதிட்டிரராசன், மன்றல் இல் குழலாள் தன்
வாசகம் எனும் நஞ்சால் - வாசனைக்குஇடமான[இயற்கைநறுமணம்
நீங்காத]கூந்தலையுடையதிரௌபதியினது (இங்ஙனங் கூறிய)
வார்த்தையாகிய விஷத்தால், பொன்றினன் என-இறந்தவன்போல
(நிலைகலங்கி),புலம்பிய பொழுது-(வீமனைக்குறித்து) அழுதசமயத்தில்,-
அன்பால் ஒன்றிய முனி ரோமன் உரை எனும் அமுதால்-
அன்போடுபொருந்தின ரோமச முனிவனது வார்தையென்கிற அமிருதத்தால்,
துன்றிய துனி தீரா - பொருந்திய அத்துன்பம் சிறிது தணிந்து, சோகமொடு -
விசனத்துடனே, உரை செய்வான்-(சில வார்த்தை) சொல்பவனானான்;(எ -
று.)-அவற்றை, மேல் மூன்றுகவிகளிற் காண்க.

     துரியோதனாதியர்நூறுபேரையும் வீமன் கொன்றுஅவர்களுதிரத்தில்
நனைக்கப்படுமளவுந்தனதுகூந்தலைமுடித்து அலங்கரிப்பதில்லையெனத்
திரௌபதி சபதஞ்செய்து அங்ஙனமொழுகுபவளாயினும்,
உத்தமஸ்திரீகளதுகூந்தலுக்கு இயற்கைப்பரிமளம் உண்டென்னும்
நூல்வழக்கைக்கொண்டு, இங்கே 'மன்றலில்குழல்'என்றது.  இனி, மன்றல்
இல் குழல் - (பூச்சூடுதலாகிற) செயற்கைநறுமண மில்லாத கூந்த
லென்றுமாம்;இல்குழல் - பண்புத்தொகை.  வீமன் முன்போலவே
நெடுந்தூரம் பிரிந்துசென்றானென்று திரௌபதி சொன்ன வார்த்தை,
பிராணபதமானவீமனுக்கு அபாயம் நேருமோ  என்ற சங்கையைத்
தருமனுக்கு விளைத்துஅவனைமரணவேதனைக்கொப்பான
மனவேதனையைஅடையும்படி செய்ததனால்,'குழலாள்தன்
வாசகமெனும்நஞ்சாற்  பொன்றினனென'எனப்பட்டது.  பொன்றினனென
என்றதனால்,மூர்ச்சையடைந்தன னென்க.  அமிர்தம் மரணவேதனையை
யொழித்தல்போல ரோமசர் வார்த்தை மரணவேதனைக்கொப்பானதருமனது
மனவேதனையைத்தீர்த்ததனால்,'ரோமனுரையெனுமமுதாலேதுன்றிய
துனிதீரா'என்றது.  முனி ரோமன் - பொதுப்பெயர் முன்னாகமாறின
இருபெயரொட்டுப் பண்புத்தொகை.  ரோமன்=ரோமசன்: விகாரம்.
மன்றலில்குழலாள் என்றதில், இல்-சாரியையுமாம்.  மன்றல் செய்
குழலாளென்றும் பாடமுண்டு.                         (569)

68.-இதுமுதல்மூன்றுகவிகள் - ஒருதொடர்: வீமனைக்
குறித்துத் தருமன்மீளவும்புலம்பி உரோமசன்பாதங்களில்
விழுதல்.

கூற்றுவனிகர்நாகக் கொடியவன்முதலாயோர்
நூற்றுவரையும்யானே நூறிவிண்ணுலகின்மேல்
ஏற்றுமவ்வளவும்யா னின்பயநுகரேனென்று
ஆற்றுதியுயிரையா வம்மொழிபழுதாமோ.

     (இ-ள்.) ஐயா- ஐயனே [வீமா]!'கூற்றுவன்நிகர்-(கொடுமையில்)
யமனையொத்தநாகம் கொடியவன் முதல் ஆயோர் நூற்றுவரை