பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்361

உம்-பாம்புக்கொடியையுடைய துரியோதனன் முதலானவர்களாகிய
நூறுபேரையும், யான்ஏ-நானொருத்தனே,நூறி-கொன்று, விண் உலகின்
மேல் - வீரசுவர்க்கத்தில், ஏற்றும் அ அளவுஉம்-ஏறச் செய்கிற வரையிலும்,
யான் - நான், இன் பயம் நுகரேன் - இனிமையான தண்ணீரைக் (கையால்
எடுத்துக்) குடியேன்,'என்று-என்று சபதஞ்செய்து, உயிர் ஆற்றுதி -
(அங்ஙனமே) உன்உயிரை ஓம்பி வருகிறாய்;அ மொழி-அந்தச்
சபதவார்த்தை, பழுதுஆ ம்ஓ-வீணாகுமோ? (எ-று.)

     இதுவும்,மேற்கவியும்-தருமபுத்திரன் வீமனிடத்துள்ள மிக்க
அன்பினால்அவனைஎதிரிலிருக்கிறவனாகக்கருதி அவனை
முன்னிலைப்படுத்திப்புலம்புவன.  இன்பயம் நுகரேன் - தனது
கதாயுதத்தால் தண்ணீரைமோதி அதனால்தெறிக்கின்றநீர்த்துளிகளையே
நாவிலேற்று உட்கொண்டு வாழ்வதாக வீமன்பிரதிஞ்ஞை.  அம்மொழி
பழுதாமோ என்றது-நீ இங்ஙனம் அடிக்கடி தையல்சொற்கேட்டுத் தனியே
நெடுந்தூரஞ்சென்று வலியவரையெதிர்த்துப் போர்செய்தலில் உனக்கு
ஒருகால் அபாயமுள தாயின் அந்தச்சபதம் நிறைவேறாமற்போய்ப்பழியும்
பாவமுமாய்முடியுமே யென்னுங் கருத்தால். பயம்=பயஸ்: வடசொல். (570)

69.துனைவருகடலாடைசூழ்வருமெழுபூவோ
நனைகெழுமொருபூவோநன்றெனநகைசெய்ய
உனையொருவனையும்யானுளனெனினொருவேனுக்கு
அனைவருமுளர்யானுமாருயிருளனம்மா.

     (இ-ள்.) துனைவரு-(அலைகள்)நெருங்கி வருகிற, கடல் - கடலாகிய,
ஆடை-சேலையினால்,சூழ்வரும் - சுற்றப்பட்ட, எழு பூஓ - ஏழுதீவுகளாகப்
பிரிந்துள்ள பூமியோ? நனைகெழும் ஒரு பூஓ-(தேனினால்)நனைந்து
விளங்குகின்ற ஒருமலரோ?  நன்று-சிறப்புள்ளது (இவ்விரண்டில் எது)? என-
என்றுகூறி, (தருமன்), நகை செய்யா - சிரித்தல்செய்து,-உனை
ஒருவனைஉம்யான் உளன் எனின்-உன்னையொருத்தனையும்நான்
(அழியாமல்) உடையவனாயின்,ஒருவேனுக்கு அனைவர்உம்உளர்-
தனியனானஎனக்குஎல்லோருந் துணையுள்ளவராவர்: யான்உம் ஆர் உயிர்
உளன் - நானும் பெறுதற்கருமையான உயிரை உடையவனாவேன்;(எ-று.)

     'ஒருபூவைக்குறித்துஇங்ஙனஞ்சென்று வலியவரோடுபொருகையில்
உன்உயிர் ஒருகால் ஒழியுமாயின், நீ பகைவர்களையொழித்து
ஏழுபூவைப்பெறுவதாகிய இலாபம் போய்விடுமே! இது தகுதியோ?'
என்றவாறு.  'எழுபூவோவொருபூவோநன்று' என்றது, ஏழுபூவினும் ஒருபூ
ஒருபொழுதும் மேலாகா தென்னுங் கருத்தால், பூ என்னுஞ்சொல்-
வடமொழியாயிருக்கும்போது பூமியையும், தென்மொழியாயிருக்கும்போது
மலரையுங் குறிக்குமாதலால், சிலேடைவகையால் சமத்காரந்தோன்ற
'எழுபூவோஒரு பூவோ நன்று'என்றான். பின் இரண்டடி, வீமன்
தருமனுக்குப் பிராணபதமான தம்பி யென்பதை விளக்கும். நனைகெழும்பூ-
முன்னே அரும்பாகியிருந்து பின்புமலர்ந்து