கோடி வெம் போர் -ஒருகோடி [மிகப்பல]கொடிய யுத்தம், விளைந்தது- (வீமனுக்கு) நேர்ந்தது;வஞ்சனைமணிமான் - வஞ்சனையையுடைய (இயக்கர்படைத்தலைவனான)மணிமானென்பவன், நம் மாருதி விடும் அம்பால்-நமதுவீமன் எய்த பாணத்தால், துஞ்சினன் - இறந்தான்; அவன்மேல்-அத்தகைய வீமன்மேல், இனி-இனிமேல், துனிஉம்வரும் - (குபேரனது) கோபமும் உண்டாகும்; (எ - று.)-மாது,ஓ-ஈற்றசை. உம்மை, மாற்றப்பட்டது. அளகையில்நிகழ் செய்கையை முனிவர் தமதுஞானக்கண்ணினால் நோக்கியறிந்து கூறுகின்றாரென்க. ஒருகோடி என்பதை, விஞ்சையரோடும் வஞ்சனையோடுஞ்சேர்ப்பினும்மையும். மாருதிவிடுமம்பு - இங்கே பிரமாஸ்திரம். அ மாருதி எனப் பிரித்து - அங்குச் சென்ற வீமன் எனினுமாம். அவன் மேலும் து(ன்)னிவரும்இனி என்பதற்கு - அவ்வீமன் இனி இதற்கு மேலும் (அங்கு) நெருங்கிச் செல்வா னென்றும் பொருள் கொள்ளலாம். (573) 72.-உரோமசர்குபேரநகர்க்கு விரைவாச்செல்லுதற்குக் கடோற்கசனைநினைக்குமாறுகூற, தருமன் அவனைநினைத்தல். இவன்மிசை யிடையூறொன்றெய்துறுவதன்முன்யாம் நவநிதிகளினாதனன்னகருறவேண்டும் கவரெயிறுளபேழ்வாய்க் கடோற்கசன்வருமாறிங்கு அவனிபநினையென்றானரசனுநினைவுற்றான். |
(இ-ள்.)இவன்மிசை - இவ்வீமன்மேல், இடையூறு ஒன்று - (குபேரனாலாகிற)துன்பமொன்று, எய்துறுவதன் முன் - சேர்வதற்கு முன்னமே,யாம்-நாம், நவநிதிகளின்நாதன் நல்நகர் உற வேண்டும் - ஒன்பது வகை நிதிகளுக்குந் தலைவனானகுபேரனது சிறந்த அளகாபுரியை அடைதல் தகுதி;(அதன்பொருட்டு), கவர் எயிறு உள பேழ் வாய் கடோற்கசன் வரும் ஆறு - (உயிர்களைஉடம்பினின்று) கொள்ளுதற்கேற்ற பற்களையுடையதிறந்த வாயையுடைய கடோற்கசன் இங்குவரும்படி, இங்கு - இப்பொழுது, அவனிப - அரசனே! நினை- (அவனைமனத்தில்) நினைப்பாய்,என்றான்-என்று(ரோமச முனிவர் தருமபுத்திரனுக்கு) நியமித்தார்;(அங்ஙனமே, அரசன்உம் - தருமராசனும், நினைவுற்றான்- எண்ணினான்;(எ - று.) யாம் - நீயும்நானும் நகுல சகதேவரும் பாஞ்சாலியும் ஆகிய அனைவருமென்க:முன்னிலையையும்படர்க்கையையும் உளப்படுத்திய தன்மைப்பன்மை. நவநிதி-மகாபதுமம், பதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என்பன. வேண்டும்- இன்றியமையாமைப்பொருளது. பலவகை யொலியாற் கிரிகுகை பிரதித்தொனிசெய்யவே, விமசேனனைக்காணாமல்வருந்திப் பாண்டவர் நால்வரும் கந்தமாதனமலையினுச்சியிலேறி வீமனிருக்குமிடத்தைச் சார்ந்தன ரென்று முதனூல் கூறும். (574) |