பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்365

யன் வலக்கண்ணும்,சந்திரன் இடக்கண்ணும், அக்கினி நெற்றிக் கண்ணுமாக
இறைவனுக்குக் கண்மூன்றும் முச்சுடராம்.  வாய்திக்கு-வினைத்தொகை.
இனி, மூதூர்வாய்-மூதூரில், திக்கு-வீமனிருந்த திசையில் எனவும்
உரைக்கலாம்.                                             (576)

75.-வீமனிருக்குங்களத்தைச் சேர்ந்ததும், மலர்தூவித்
தருமனைவீமன் வணங்குதல்.

சென்றொருநொடிவேலைச்சிறுவனுமறவீமன்
நின்றமர்புரிவெம்போர் நிலமணுகுறுமுன்னம்
வென்றிகொளுரவோனும் வேந்தனையெதிர்கொள்ளா
மன்றல்கொண்மலர்தூவி வணங்கினனிருதாண்மேல்.

     (இ-ள்.) சிறுவன்உம்-குமாரனானகடோற்கசனும், ஒரு நொடி வேலை-
ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே, சென்று - போய், மறம் வீமன் நின்று அமர்
புரி வெம் போர் நிலம்-பராக்கிரமத்தையுடைய வீமசேனன்
சலியாதுநின்றுபோர்செய்கிற கொடிய யுத்தகளத்தை, அணுகுறும் முன்னம்-
சேர்வதற்குமுன்பு [சேர்ந்தவுடனேயென்றபடி],-வென்றிகொள்
உரவோன்உம் - வெற்றியைக்கொண்ட வலிமையையுடைய வீமனும்,
வேந்தனைஎதிர்கொள்ளா-தருமராசனைஎதிர்கொண்டுஉபசரித்து, இரு
தாள்மேல்-(அவனது) உபயபாதங்களின்மேல், மன்றல் கொள் மலர் தூவி-
வாசனையைக்கொண்டபூக்களைச்சொரிந்து, வணங்கினன்-நமஸ்கரித்தான்;
(எ - று.)                                                (571)

76.-இக்கவி-தருமன்வீமனைநோக்கிக்கூறும் வார்த்தை.

சதித்தனைசதிசெய்தாய்தம்பியுமலைவாளா
வதைத்தனைமணிமான்றன்மன்னுயிர்தனைமன்னோ
நிதித்தலைவனுநீடுஞ்சேனையுமினிநின்மேல்
கொதித்தெழுமுதனாளிற்கோபமுமுளதந்தோ.

இதுவும், மேற்கவியும்- ஒருதொடர்.

     (இ - ள்.)சதித்தனை- (எனக்குத் தெரியாமல்) வஞ்சனையாகஇங்கு
வந்து இத்தொழில்செய்தாய்;சதி செய்தாய் தம்பிஉம் அலை-(இங்ஙனம்)
வஞ்சனைசெய்தநீ(எனக்குஏற்ற) தம்பியும் ஆகமாட்டாய்;வாளா-வீணாய்,
மணிமான் தன் மன் உயிர்தனை- மணிமானினுடைய நிலைபெற்றஉயிரை,
வதைத்தனை-ஒழித்தாய்;நிதி தலைவன்உம்- நவநிதிகளுக்குந்தலைவனான
குபேரனும், நீடும் சேனைஉம்-(அவனது)பெரிய சைனியமும், இனி நின்
மேல் கொதித்து எழும்-இப்பொழுது உன்மேற் கோபித்துப் போர்செய்ய
வரும்;முதல் நாளில் கோபம்உம் உளது-(உன்மேல் அவர்களுக்கு நீ)
முன்னொருநாள்செய்தகாரியத்தாலாகிய கோபமும் இருக்கிறது;அந்தோ -
ஐயோ! (எ - று.)-மன், ஓ-அடியிறுதியில்வந்த அசை.

     அந்தோ -இரக்கக்குறிப்பிடைச்சொல்.  சதித்தல்-வஞ்சனைசெய்தல்.
எழும் - செய்யுமென்முற்று, உயர்திணையாண்பாலோடு
அஃறிணையொன்றன்பாலுக்குவந்தது.                         (578)