ஏழுகவிகள் -ஒருதொடர். (இ-ள்.)எந்தை-என் தந்தையே! கேள்-(யான் சொல்வதைக்) கேட்டருள்வாயாக;இவனைமானுடன் என்று எண்ணலை- இவ்வீரனைச் சாதாரணமனிதனென்றுநினையாதே;முந்தை முப்புரம் பொடிபடுத்த மூர்த்தி- பழமையானதிரிபுரத்தைச் சாம்பலாக்கின சிவபிரான், தன் சிந்தையால் - தனதுதிருவுள்ளக்கருத்தோடு, ஐவர் இந்திரரை-இந்திரர்கள் ஐந்துபேரை, செனம் என-(பூமியிற்) சென்று பிறவுங்கள் என்றுநியமிக்க,(அவர்கள் அப்படியே), நிலம் மகள் வருத்தம் மாற்றுவான் - (கொடியவர் பலர் தன்மீது ஒருங்குவாழ்தலாலுண்டான) பூமிதேவியினது பாரவருத்தத்தை ஒழிக்கும்பொருட்டு, வந்தனர் - (மனிதராய்) வந்துபிறந்தார்கள்;(எ-று.) இவ்வைவரேபஞ்சபாண்டவராவர். செல்லும் என்னும் ஏவற்பன்மைச் செய்யுமெனமுற்று. 'சென்ம்'என நின்றது. இதிற்குறித்தவரலாறு வருமாறு:-முற்காலத்தில்நாளாயணியென்ற ஒருத்தி, மௌற்கல்யனென்பவனைமணஞ்செய்துகொள்ள, அவன் அவளது கற்புறுதியையும் அன்புநிலையையும்சோதிக்கக் கருதி மிகுந்தகுஷ்டநோயும் அதனாற்சிதைந்தவடிவமும் அதிககிழத்தனமும் எப்பொழுதும் பெருங்கோபமும் உடம்பில் துர்க்கந்தமும் உடையவனாய்த்தன்னைக் காட்ட, அப்பொழுதும்அவள் அவன்பக்கல்அன்பு சிறிதுங்குறையாமல் பலவகையுபசாரங்களையும்வழுவாது நன்மனத்தோடு புரிந்து முறைப்படி அவனுண்டுமிகுந்தஎச்சிலைத்தானுண்டுவாழ்ந்திருக்கையில், ஒருநாள் அவனுண்டமிச்சிலில் அவனுடைய விரலொன்று அற்றுவிழுந்துகிடக்கக் கண்டும் சிறிதும் அருவருப்புக்கொள்ளாமல் அதனையெடுத்துவைத்துவிட்டு அவ்வுணவை அன்போடு உண்ண, அங்ஙனம் அவள் நிலைகுலையாது வழிபட்டுவந்ததை அவன் பார்த்து மிகுந்ததிருப்திகொண்டு தனது நோய்வடிவத்தையொழித்துத் தவமகிமையால் காமனினும்அழகிய வடிவங்கொண்டு அவளைநோக்கி'நினக்குவேண்டும் வரம் வேண்டுவாய' என்ன, அவள் வேறொருவரத்தையுங்கேளாமல் 'உன்அன்பு எப்பொழுதும் நீங்காதாகுக'என்றுசொல்ல, அங்ஙனமே அவன் உடன்பட்டு ஐந்துவடிவங்கொண்டு இவளைஅனுபவிக்க, இவ்விருவரும் நெடுங்காலம் நீங்காமற் பெரும்போகம் நுகர்ந்தனர்:பின், நாளாயணி விதிவசத்தால் இறந்து மறுபிறப்பில் இந்திரசேனையென்னும்பெயருடையவளாய் அவனைச் சேர்தற்கு வர, அப்பொழுதுஅவன் பெருந்தவஞ்செய்யுங் கருத்துஉடையவனாய்அவளுக்கு இடங்கொடாது விட்டுச்செல்ல, அப்பொழுது இவள் அவனை'யான்இனி என்செய்வது?'என்று வினவி அவன் கட்டளையிட்டபடிஅர்த்த நாரீசுவரமூர்த்தியைநோக்கித் தவஞ்செய்தாள். அந்த ஐந்துமுகக்கடவுள் பிரதியக்ஷமாகையில், இவள் 'எனக்குஏற்றகணவனைத்தருக'என்று அன்பால் ஐந்துதரம் அடுக்கிச்சொல்லி வேண்ட, சிவபிரானும் 'அப்படியேயாகுக'என்று ஐந்துதரங்கூறி அவள் ஐந்து கொழுநரைப்பெறும்படி அனுக்கிரகித்தான். அதற்கு அவள் மகிழாமல் தக்கவொருநாயகனைத்தரும்படி பிரார்த்திக்க, பரமசிவன் 'நீ |