பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்371

ஐந்துதரம் வேண்டியபடிநாம் உனக்கு ஐந்து தரம் அருளியது தவறாது;
ஆனால்அவ்வரத்தை மறுபிறப்பில் அனுபவிக்கும்படி அருள்செய்கிறோம்'
என்று அநுக்கிரகித்து, அவளைக்கங்காநதியில் மூழ்கிவரும்படி சொல்ல,
அவ்வாறே சென்ற அவளது விழிகளினின்று(அப்பொழுதேஒருபதியைப்பெறாமல்
மறுபிறப்பில் ஐந்து பதிகளைப்பெறவேண்டுதல் பற்றிய) சோகத்தாற்
பெருகியகண்ணீர் கங்கையில் விழுந்துபொற்றாமரைமலராயிற்று:அப்புதுமையை
அங்குவந்த தேவேந்திரன் பார்த்துஅதிசயித்து 'இதுஎன்ன?' என்றுவினவி
அவளைத்தொடர்ந்துசெல்லுகையில்அங்குநின்ற சிவபிரானைமதியாது
அலட்சியஞ் செய்ய, உருத்திரமூர்த்திகோபங்கொண்டு அவனதுசெருக்கையடக்கி
இங்ஙனமே முன்செருக்குற்றுப்பின்புஅடக்கப்பட்டுப் பிலத்தில்
அடைத்துவைக்கப்பட்டுள்ள நான்குஇந்திரர்களையும்அவனுக்குக் காட்டி,
'நீங்கள் ஐவீரும் பூலோகத்தில் மனுஷ்யராசராய்ப்பிறந்து
இராசகன்னிகையாகமறுபிறப் பெடுக்கும்இவளொருத்தியை மணம்புரிந்து
கொண்டு துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநஞ்செய்து குற்றந்தீர்ந்து மீண்டும்
விண்ணுலகடைவீர்'என்று ஆஜ்ஞைசெய்ய, அங்ஙனமே புதியஇந்திரன்
அருச்சுனனாகவும்பழைய இந்திரர்நால்வரும் மற்றை
அவனுடன்பிறந்தவராகவும் தேவகுமாரராய்க் குந்திமாத்திரிதேவியரிடம்
பிறந்து அவ்விந்திரசேனையின்அவதாரமான திரௌபதியை ஒருங்கு
விவாகஞ்செய்து வாழ்ந்தன ரென்பது.  இதனைக்கீழ்த்
திரௌபதிமாலையிட்டசருக்கத்திற் காண்க.  இந்திரரைவர்-விசுவபுக்,
பூததாமா, சிபி, சாந்தி, தேஜஸ்வீ எனப்படுவர்.               (587)

86.தருமனென்றவனிபன் றம்பியும்மிவன்
வரிசிலைவிசயனென்றொருவன்மற்றவன்
புரிதிறலசுரரைப் பொருதங்கிந்திரன்
திருவமருலகெலாந் திருத்திவைகினான்.

     (இ-ள்) இவன்- இவ்வீமன்,-தருமன் என்ற அவனிபன் -
தருமபுத்திரனென்று சொல்லப்படுவானது, தம்பிஉம் - தம்பியாவன்:வரி
சிலைவிசயன் என்ற ஒருவன்-கட்டமைந்த வில்லையுடைய
அருச்சுனனென்ற ஒருவன், மற்றவன்-இன்னொருதம்பியாவன்;(அவன்),
திறல் புரி அசுரரை பொருது-வலிமையைக்காட்டுகின்ற அசுரர்களைப்
போர்செய்து அழித்து, இந்திரன் திரு அமர் உலகுஎலாம் -
தேவேந்திரனுடைய செல்வம்மிகுந்த சுவர்க்கலோகம் முழுவதையும், திருத்தி
- (பகையச்சமில்லாதபடி) சீர்படுத்தி, அங்கு - அவ்விடத்தில்
[தேவலோகத்தில்],வைகினான்-தங்கியுள்ளான்;

     என்றவனிபன்,என்றொருவன்- விகாரம்.  பொருது-கொன்று;காரியம்
காரணமாக உபசரிக்கப்பட்டது.  தம்பியும், உம் - எச்சம்.

87.வேடமோமானுடம் வெகுண்டபோதலால்
ஆடவர்பெருமையை யறியலாகுமோ
நாடியசிறுகுற ளொன்றுநம்பகேள்
நீடியமுகடுற நிமிர்ந்ததில்லையோ.