பக்கம் எண் :

372பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)வேடம்ஓ - (இவன்கொண்ட) வடிவமோ, மானுடம் -
மனிதவடிவம்:வெகுண்ட போது அலால் - கோபித்தபொழுதிலல்லாமல்,
(மற்றைப்பொழுதில்), ஆடவர் பெருமையை அறியல்ஆகும் ஓ -
ஆண்மக்களது மகிமையை அறியமுடியுமோ?[முடியாதன்றோ?]நம்ப கேள்
- ஐயனே! கேட்டருள்வாய்:நாடிய சிறு குறள் ஒன்று - (இது
எத்தன்மையதென்று) ஆராய்தற்குரிய சிறிய வாமனவடிவமொன்று, (முன்பு),
நீடிய முகடு உற நிமிர்ந்தது இல்லைஓ- உயர்ந்த ஆகாயவுச்சியைப்
பொருந்த வளர வில்லையா?(எ - று.)

     குறள்போலவேஇவனும் சாதாரணமனிதன்போலிருந்துசமயம்
வந்தபோது தன் திறமையை காட்டுபவக் னென்பதாம்.  மானுடராய் வந்த
தேவர் சமயத்தில் தம்திறலைக்காட்டுவ ரென்பதை, உருத்திரசேனன்
இரண்டுகவிகளில் விளக்குகிறானென்க.                       (589)

88.மற்றுளவரையெலா நடுக்கவார்பிறைக்
கற்றையஞ்சடையவன் கயிலைமாக்கிரி
உற்றுடனெடுத்தவ னுயிரும்வாழ்க்கையும்
செற்றவர்மனிதரோ தேவரோவையா.

     (இ - ள்.)ஐயா - தந்தையே! மற்றுஉள வரை எலாம் - வேறாகவுள்ள
மலைகள்யாவும், நடுங்க - (அச்சத்தால்) நடுங்கும்படி, பிறைவார் கற்றை
அம்சடையவன் மா கயிலைகிரி-பிறைச்சந்திரனைச்சூடியநீண்ட
தொகுதியான அழகிய சடையையுடைய சிவபிரானது சிறந்த ஸ்ரீகைலாச
பருவதத்தை உற்று உடன் எடுத்தவன் - அருகில் வந்து ஒருசேரத்
தூக்கினவனானஇராவணனது, உயிர்உம்-உயிரையும், வாழ்க்கைஉம் -
செல்வவாழ்வையும், செற்றவர்-அழித்தவர், மனிதர்ஓ - மனிதர்களோ?
தேவர்ஓ - தேவர்களோ?(எ-று.)

     கயிலைக்கிரியையெடுத்தஇராவணனைக்கொன்றவர்தேவரல்லர்:
மனிதரே;ஆதலால், இவனும் அங்ஙனம் தேவகணத்தவரை அழித்தற்கேற்ற
ஆற்றலுடைய னென்பதாம்.  நமக்குட்பெரியதுஞ் சிறந்ததும் பேராற்றலுடைய
சிவபிரானுக்கு வாழிடமாகவுள்ளதுமான கைலாசகிரிக்கே இந்தநிலைமை
வந்ததென்றால்,நமதுகதிஎன்ன ஆகுமோ என்றுகருதி மற்றையமலைகள்
அப்பொழுது அஞ்சி நடுங்கினவென்க.                          (590)

89.மட்டவிழ்தொடைமணி மானையோர்முனி
ஒட்டியவரிசிலைமனிதனாலுயிர்
பட்டழிகுவையெனப் பகர்ந்துசாபமன்று
இட்டதுமுணர்ந்தவற் கிரங்கலெந்தைநீ.

     (இ-ள்.)எந்தை - என் தந்தையே! ஓர் முனி-அகத்தியனென்ற
ஒருமுனிவன், மட்டு அவிழ் தொடை மணிமானை-வாசனைவீசுகின்ற
பூமாலையையுடைய மணிமானை நோக்கி, ஒட்டிய வரி சிலைமனிதனால்
உயிர் பட்டு அழிகுவை என பகர்ந்து - பொருந்தின கட்டமைந்த
வில்லையுடையஒரு மனிதனாலே(நீ)உயிரொழிந்து இறப்பா யென்று கூறி,
அன்று - முற்காலத்தில், சாபம் இட்டதுஉம் - சாபங்கொடுத்