பக்கம் எண் :

378பாரதம்ஆரணிய பருவம்

மொடுஉம் -தம்பியருடனே, மன்னனை- தருமராசனை,தன் நகர் கொண்டு
மன்னினான்- தனது அளகாபுரிக்கு அழைத்துக்கொண்டு போனான்;(எ-று.)
இப்போது வனத்தில் வசித்தலால் 'முதல்வாழ்வுறும் நகர்'என்றது.  (601)

100.-இதுவும்,மேற்கவியும் - குளகம்:
குபேரன் தன் நகரிமுதலியனகாட்டி அமுதூட்டிப்
பாண்டவரையுபசரித்தல்.

திருத்தநகரியுஞ் சிறப்புஞ்செல்வமும்
மருத்தகுகற்பக வனமும்வாவியும்
குருத்தகுமணிகளின் குழாமுங்கோயிலும்
கருத்துறமகிழ்ந்துகண் களிப்பக்காணவே.

     (இ-ள்.) திருதகு - மேன்மைபொருந்தின, நகரிஉம் -
அளகாபுரியையும், சிறப்புஉம் - (தன்னுடைய) சிறப்புக்களையும்,செல்வம்உம்
- (தனக்கு உரிய) செல்வமான நவநிதிகளையும்,மரு தகு கற்பகவனம்உம் -
வாசனைபொருந்தின கற்பகச்சோலைக்கொப்பான(சைத்திரரதமென்னும்)
உத்தியானத்தையும், வாவிஉம் - (அதிலுள்ள நீர் நிலையையும்,குரு தகு
மணிகளின் குழாம்உம் -பெருமைபொருந்தின இரத்தினங்களின்
குவியல்களையும்,கோயில்உம்-(தனது)அரண்மனையையும்,கருத்து உற
மகிழ்ந்து கண்களிப்ப காண-மனம் மிகமகிழ்ச்சிபெற்றுக்
கண்கள்களிப்பையடையுமாறு (அவர்கள்) காணும்படி,-(எ.று.)-'காட்டினான்'
என மேற்கவியி லியையும்.

    கற்பகவனம்-உவமையாகுபெயர்.  வாவி-மாநஸ மென்பர்.  குரு-
நிறமுமாம்.  திருத்தகு சிலையுடன்என்ற பாடத்துக்கு - மேன்மை
பொருந்தின கைலாசகிரியுடனே யென்க: வடதிசையிலுள்ளதாகிய சிவனது
கைலாசமலையேகுபேரனுக்கும் இடமென்பது, நூல்களிற் பிரசித்தம்: சிலை
- கல்.  மலைக்குக்கருவியாகுபெயர்.                         (602)

101.காட்டினான்றன்மனக்கருணைவெள்ளநீர்
ஆட்டினானன்கலத்தமுதமன்புடன்
ஊட்டினானுகந்துபசரித்துச்செங்கையால்
நீட்டினானாடையுநிதிகள்யாவுமே.

     (இ-ள்.)காட்டினான்- (குபேரன் பாண்டவர்களுக்கு எல்லாப்
பொருள்களையுங்)காண்பித்து, தன் மனம் கருணைவெள்ளம் நீர்
ஆட்டினான்- தனதுமனத்திலுள்ள அருட்பெருக்கினால்(அவர்களை)
நீராடுவித்து [அவர்கள்பக்கல்மிக்ககருணைசெய்துஎன்றபடி],நல்கலத்து
அமுதம் அன்புடன் ஊட்டினான்- சிறந்தபாத்திரத்திலே
அமிருதம்போலினியவுணவை அன்போடு (அவர்களுக்குக்கொடுத்து)
உண்ணச்செய்து, உகந்து உபசரித்து - விரும்பியுபசாரங்கள் செய்து, செம்
கையால் - சிவந்த(தனது) கைகளாலே, ஆடைஉம் - வஸ்திரங்களையும்,
நிதிகள்யாஉம் - பலவகைச் செல்வங்களையும்,நீட்டினான்- கொடுத்தான்;
(எ-று.)                                               (603)