பக்கம் எண் :

38பாரதம்ஆரணிய பருவம்

சடைமுடியழகுடையவன்என்று மற்றொரு சாராரும் பொருள் கூறுவர்.    (48)

49.- அருச்சுனனது மனத்தையும் தவத்துறுதியையும்
சோதிக்க இந்திரன் உபாயமெண்ணுதல்.

நற்றவத்துறுதியும் நரன்கருத்துநாம்
முற்றறிகுவமென முன்னுஞ்சிந்தையான்
கற்றையஞ்சடையவன் கயிலையங்கிரி
உற்றறிவுறுவதற் குபாயமுன்னினான்.

    (இ-ள்.) (தேவேந்திரன்), நாம்-, 'நரன்-அருச்சுனனது, நல்தவத்து-நல்ல
தவத்தினது, உறுதிஉம்-வலிமையையும், கருத்துஉம்-(அவனது) எண்ணத்தையும்,
முற்றும் - முழுவதும், அறிகுவம்-(பரிசோதித்து) அறிந்துகொள்வோம்,' என -
என்று, முன்னும்-எண்ணுகிற, சிந்தையான் - மனத்தையுடையவனாய்,-கற்றை
அம் சடையவன் - தொகுதியாகிய அழகிய ஜடையையுடைய பரமசிவனது,
கயிலை அம் கிரி - அழகிய கைலாச மலையை, உற்று-பொருந்தி,
அறிவுஉறுவதற்கு - சோதித்து அறிவதற்கு, உபாயம் - உபாயத்தை,
உன்னினான் - ஆலோசித்தான்; (எ-று.)

     கற்றையஞ்சடை, கயிலையங்கிரி, அம்-சாரியையுமாம். அறிவுறுவதற்கு
என்ற இடத்து 'உறு'என்றவினை துணிவுப்பொருளைக் காட்டும்.    (49)

50.-இந்திரன்அருச்சுனனெண்ணத்தை யறிய உருப்பசி
முதலிய தேவமாதரை யேவுதல்.

தூநகையுருப்பசி யரம்பைதொண்டைவாய்
மேனகைதிலோத்தமை யென்றுவேலையின்
மானெனமயிலென வந்தமாதரீர்
ஆனவாறறிதிர்போ யவன்றனெண்ணமே.

     (இ-ள்.)தூநகை - வெண்மையான புன்சிரிப்பையுடைய, உருப்பசி-
ஊர்வசியும், அரம்பை-ரம்பையும், தொண்டை வாய்-கொவ்வைப்பழம்போற்
சிவந்த அதரத்தையுடைய, மேனகை-மேனகையும், திலோத்தமை-
திலோத்தமையும், என்று - என்று பெயர் சொல்லப்பட்டு, வேலையின்-
திருப்பாற்கடலினின்றும், மான் என - மான் போலவும், மயில் என-மயில்
போலவும், வந்த - தோன்றின, மாதரீர்-பெண்களே! (நீங்கள்),போய்-சென்று,
அவன் தன் எண்ணம்-அவ்வருச்சுனனது கருத்து, ஆனஆறு - உள்ள
விதத்தை, அறிதிர் - அறிவீர்களாக; (எ-று.)-இஇது,இந்திரன் தேவமாதரை
நோக்கிக் கூறியது.

     சிரிக்குங் காலத்தில் வெளுப்பாகிய பற்களினொளி சிறிது வெளித்
தோன்றுதலால், அதன் தன்மையைச் சிரிப்பின் மேலேற்றி, 'தூநகை'
என்றார்: இனி சுத்தமான பற்களெனவும்