கொளேல்-(உனது)சிறந்த மனத்தில் (அவனது) ஒருபிழையையும் மிகுதியாகக்கருதாதே,'எனா-என்றுசொல்லிவேண்டி,முடி மன்னர் மன்னன் - கிரீடத்தையுடைய அரசர்களுக்குஅரசனானயுதிட்டிரன், இளையோரொடுஉம்- (தனது) தம்பிமார்களுடனே, மொய் கொள் தாமம் முடி உற வணங்கி-நெருங்கினபூமாலையைச்சூடியதங்கள் தலைகள்(அவனதுசீர்பாதங்களிற்)படும்படிவிழுந்து நமஸ்கரித்து, மை தவழ்ந்து உலவும்-மேகங்கள் பொருந்தியுலாவப்பெற்ற [மிகவுயர்ந்த],மாடம்- மேலிடத்தையும், நீள் ஞாயில்-நீண்ட ஞாயிலென்னுமுறுப்பையுமுடைய, புரிசை - (அவ்வளகாபுரியின்) மதிலினது, வாயில்தனில்-கோபுரவாயிலில், எய்தினான்-வந்துசேர்ந்தான்;(எ-று.) சிறுவனாதலின்நின்னையறியாமல்நின் நகரில் அணுகினனென்றுமாம். கொளேல்-எதிர்மறைஏவலொருமைமுற்று. இளையோரொடும்-மத்திமதீபம். ஞாயில்-ஒருமதிலுறுப்பு. (607) 106.-தருமனுடன் வந்தமுனிவரையும் பூசித்துக் குபேரன் மணிமுதலியனதர, அவர்கள் அவனுக்கு ஆசிகூறல். மாசிலாதமுடிமன்னர்மன்னனுடன் வந்தமாமுனிவரர்க்கெலாம் ஏசிலாவகையினெண்ணிரண்டுவகை யாயபூசைகளியற்றியே காசிலாமணியுமாடையுங்கலனு நல்கமல்கவளர்செல்வனுக்கு ஆசிகூறியுடனேதபோவன மடங்கினாரவரடங்கவே. |
(இ-ள்.) மாசுஇலாத முடி மன்னர் மன்னனுடன்வந்த - குற்றமில்லாத கிரீடத்தையுடைய அரசர்களுக்கு அரசனானதருமபுத்திரனுடனேவந்த, மா முனிவரர்க்கு எலாம் - பெரியசிறந்த முனிவர்களெல்லோர்க்கும், (குபேரன்), ஏசு இலா வகையின் - பழிப்புக்கு இடமில்லாதபடி, எண் இரண்டு வகை ஆயபூசைகள் இயற்றி-பதினாறுவகைப்பட்ட பூசைகளைச்செய்து,காசுஇலா மணிஉம்-குற்றமில்லாத இரத்தினங்களையும், ஆடைஉம்-வஸ்திரங்களையும், கலன்உம்-ஆபரணங்களையும், நல்க-கொடுக்க, (அப்பொழுது), அவர் அடங்க - அம்முனிவர்களெல்லோரும், மல்க வளர் செல்வனுக்கு ஆசி கூறி-நிறைவாக வளர்ந்த செல்வத்தையுடைய குபேரனுக்கு ஆசீர்வாதங்களைச்சொல்லி, உடனே-விரைவிலே, தபோவனம் அடங்கினார்-(தாங்கள்)தவஞ்செய்தற்குரிய காட்டை அடைந்தார்கள்;(எ-று.) எண்ணிரண்டுவகை-பண்புத்தொகைப்பன்மொழித்தொடர்; ஷோடசோபசாரம்:அவை - தவிசளித்தல், கையில்நீர்தரல், கால் கழுவ நீர்தரல், முக்குடிநீர்தரல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூல்தரல், தேய்வை பூசல், மலர்சாத்தல், மஞ்சளரிசிதூவல், நறும் புகை காட்டல், விளக்கிடல், கருப்பூரமேற்றல், அமுதமேந்தல், அடைக்காய்தரல், மந்திரமலரான் அருச்சித்தல் என்பன. மடங்கினார்எனப்பிரித்து, மீண்டனர் என்றுங் கொள்ளலாம். உடன்வந்த மாமுனிவரர் - உரோமசனாதியர். தபோவனமடங்கினவர் - உரோமசனொழிந்தமற்றை முனிவரரே (608) |