பக்கம் எண் :

382பாரதம்ஆரணிய பருவம்

107.-யாவரும் மீண்டுநந்திசேனமுனிவராச்சிரம
மடைதல்.

குந்திமைந்தரொருநால்வரும்புதிய கொடிமருங்குன்மட
                                  வல்லி யும்,
சிந்தையன்புடையமுனியும்வாணிருத சேகரன்றனதுதேரின்
                                        மேல்,
பந்திபந்திபதினாயிரம்பதின்மடங்குகூளிகள்பரிக்கவான்,
உந்திமுன்பயிலுநந்திசேனன்வனமொருநொடிப்பொழுதி
                                  லெய்தினார்.

     (இ - ள்.)குந்தி மைந்தர் ஒரு நால்வர்உம் - (அருச்சுனனையொழித்த)
குந்தியின்குமாரர் [பாண்டவர்]நாலுபேரும், புதிய கொடி மருங்குல் மட
வல்லிஉம் - புதுமையான [இளம்]பூங்கொடிபோலத் துவளுகிற
இடையையுடைய இளமையான திரௌபதியும், சிந்தை அன்பு உடைய
முனிஉம் - (எல்லாவுயிர்களிடத்தும்) மனத்திற் கருணையையுடைய
ரோமசமுனிவரும், வாள் நிருத சேகரன்தனது தேரின்மேல் - கொடிய
அரக்கர்களுக்குத் தலையணிபோலச்சிறந்தவனானகடோற்கசனது
இரதத்திலே, பந்தி பந்தி பதினாயிரம்பதின்மடங்கு கூளிகள் பரிக்க -
வரிசைவரிசையாகப் பதினாயிரமென்னுந் தொகைக்குப் பத்துமடங்கான
லட்சம் [மிகப்பல]பேய்கள் சுமந்து செல்ல, வான் உந்தி - ஆகாய
மார்க்கத்திற் சென்று, முன் பயிலும் நந்திசேனன் வனம்-முன்னே
தாங்கள்வசித்திருந்த நந்திசேனமுனிவரது ஆச்சிரமத்தை, ஒரு நொடி
பொழுதில் - வெகுவிரைவிலே, எய்தினார்-அடைந்தார்கள்;(எ - று.)

     நந்திசேனவனம்என்று முன்பு கூறப்படவில்லையாயினும்,அநுவாத
முகத்தால் இங்குக் கூறினார். இது, காந்தர்ப்பமலைச்சாரலிலுள்ள
தபோவனங்களுள் ஒன்றாகும். மடமை - பெண்களுக்குரிய
பேதைமைக்குணமுமாம்.  வல்லி - பெண்ணென்னுமாத்திரமாய்நின்றது.
கொடிமருங்குல் மடவல்லி யென்பதை, கீழ் "மின்புரைமருங்குலமின்"
என்றதுபோலக் கொள்க.  அன்பு - தெய்வபக்தியுமாம்.  நகுலசகதேவர்
மாத்திரிபுத்திரராயினும், குந்தியால் அவளுக்கு உபதேசிக்கப்பட்டமந்திரத்தின்
மகிமையாலே பிறந்தவ ராதலாலும், இளமையில் மாத்திரி இறக்கவே
இவர்களைவளர்த்தவள்குந்தியேயாதலாலும், 'குந்திமைந்தர்'என்றது. (609)

108.-நந்திசேனமுனிவனையிறைஞ்சிநிகழ்ந்தனகூறிக்
கடோற்கசனையும்அவனுக்குக் தெரிவித்தல்.

எய்தியந்தமுனிசெய்யதாண்மலர் மனஞ்செய்தன்புடனிறைஞ்சியே,
செய்தியாவுமவனுக்குநண்பொடுரை செய்துசூழ்வரவிருந்த பின்,
வெய்தின்வந்தடலரக்கர்நாயகன் விபத்தினுக்குதவியானதும்,
கொய்திலங்குவடிவாளினான்விறலும்யாவுமேன்மையொடு
                                          கூறினான்.

     (இ-ள்.)எய்தி-அங்குச்சேர்ந்து, அந்த முனி-அந்தநந்திசேன
முனிவருடைய, செய்ய தாள் மலர் - சிவந்ததிருவடித்தாமரைப்பூக்களை,
மனம்செய்து-மனத்திலே தியானித்து, அன்புடன் இறைஞ்சி-அன்போடு
வணங்கி, சூழ்வர - (தனது தம்பிமார்களும் பிறமுனிவர்