பலருந் தன்னைச்)சூழ, இருந்தபின் - வீற்றிருந்தபின்பு, செய்தியாஉம் - நடந்த செய்திகளையெல்லாம், நண்பொடு - அன்புடனே, அவனக்கு - அந்த நந்திசேனமுனிவனுக்கு, உரை செய்து - கூறி, அடல் அரக்கர் நாயகன் - வலிமையையுடைய இராக்கதர்களுக்குத் தலைவனான கடோற்கசன்இ வெய்தின் வந்து - விரைவிலே வந்து, விபத்தினுக்கு உதவி ஆனதுஉம் - (தமக்கு நேர்ந்த) துன்பத்தைத் தீர்ப்பதற்குச் சகாயமானதையும், கொய்து இலங்கு வடி வாளினான்விறல்உம் - (பகைவர்தலைகளைத்)துணிந்து விளங்குகிற கூர்மையான வாளாயுதத்தையுடைய அக்கடோற்கசனது சிறப்பையும், யாஉம்-(ஆகிய) எல்லாவற்றையும், மேன்மையொடு கூறினான்-மேன்மையாகச்சொன்னான்; (எ- று.) சூழ்வரஇருந்தபின் என்பதற்கு - அம்முனிவரைப் பிரதக்ஷிணமாகச் சுற்றிவந்து உட்கார்ந்தபின்பு என்றுமுரைக்கலாம். விபத்தினுக்குஉதவியானது என்றதை, "நோய்க்குமருந்து"என்பதுபோலப் பகைப்பொருளதாகக் கொள்க: "துன்பத்திறகியாரே துணையாவார்"என்றார்நாயனாரும். (610) 109.-இதுவும்,மேற்கவியும் - ஒருதொடர்: தருமன் கடோற்கசனைநோக்கிஉபசாரமொழி கூறுவது. வெங்கராவின்முழைவாய்புகுந்தலறி வேழமூலமெனவிரைவினிற், பொங்கராவணைதுறந்துவந்தெதிர்புரந்தபுண்ணியனையொக்கவே, தங்கராபதநெருங்குதொங்கலணி தாமவேலடலரக்கநீ, அங்கராகமணியாரமார்பநின தையனாருயிரளித்தியே. |
(இ-ள்.)தங்கு-மொய்க்கின்ற, அராபதம்-வண்டுகள், நெருங்கு இடைவிடாது நெருங்கிய, தொங்கல்-பூமாலையை,அணி-தரித்த, தாமம் வேல் - ஒளியையுடைய வேலாயுதத்தையுடைய, அடல் - வலிமையையுடைய, அரக்க - இராக்கதனே! அங்கராகம் - சந்தனப்பூச்சை, அணி - தரித்த, ஆரம் - இரத்தினமாலையணிந்த, மார்ப - மார்பையுடையவனே! வேழம்் ஒரு யானையானது,(முன்னொருகாலத்தில்), வெம் கராவின் முழை வாய் புகுந்து - பயங்கரமான முதலையினுடைய குகைபோலப்பெரிய வாயிலகப்பட்டு, அலறி - கூவி, மூலம் என - ஆதிமூலமேயென்று அழைக்க, (அப்பொழுது), விரைவினில் - துரிதமாக, பொங்கு அரா அணைதுறந்து எதிர் வந்து - விளங்குகிறசேஷசயனத்தை விட்டு எதிரிலெழுந்தருளிவந்து, புரந்த-(அவ்யானையைக்)காத்தருளின, புண்ணியனை-நல்வினைவடிவமானதிருமாலை,ஒக்க - போல, நீ-, நினது ஐயன் ஆர் உயிர் அளித்தி-உனது தந்தையின் அருமையான உயிரைப் பாதுகாத்தாய்;(எ - று.) விரைவில்வந்தகடோற்கசன்தேரின்மேலேறித் தருமபுத்திரன் அளகாபுரிசென்று சேர்ந்து சமாதானப்படுத்தாமலிருந்தால் குபேரனாலும் அவனது பரிவாரத்தாலும் வீமனுக்குநேரக்கூடியஅபாயத்தைக் கடோற்கசன்வந்து தருமனையழைத்துப்போய் நேரவொட்டாது, செய்ததையாவது, கடோற்கசனது பெரியதாதையான தான் |