வீமனைப்பிரிந்துவருந்திய சோகத்தை அவன்வந்துதீர்த்து வீமனையடையச்செய்ததையாவது,'நினதையனாருயிரளித்தி'என்பதற்குக் கருத்தாகக்கொள்க. பிந்தினகருத்துக்கு, ஐயன்-முன்னிலைப்படர்க்கை. கராம்-க்ராஹம்என்னும் வடமொழித்திரிபு. மூலம் என இயல்பாகிய அண்மைவிளியால் அழைத்ததாகக் கூறினது,கடவுள் எங்குமுள்ளவரென்று அவ்யானைஅறிந்த தென்பதை விளக்குதற்கென்க. அங்கராகம் - உடற்பூச்சு. பாண்டியநாட்டில் இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணு பக்தியுடையவனாய்ஒருநாள்விஷ்ணுபூசைசெய்கையில், அகஸ்திய மகாமுனிவர் அங்குஎழுந்தருள, அப்பொழுது அவன், கருத்துமுழுவதையும் திருமாலைப்பூசிப்பதிற்செலுத்தியிருந்ததனால்அம்முனிவர் வருகையையறியாமல் அவருக்கு உபசாரஞ்செய்யாதிருக்க, அவர் தம்மை அலட்சியஞ்செய்தானென்று கருதிக் கோபித்து 'நீயானைபோலச் செருக்குற்றிருந்ததனால்யானையாகக்கடவை'என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத்தோன்றினனாயினும்முன்செய்த விஷ்ணுபக்தியின்மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக்கொண்டுதிருமாலைஅருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருநாள் பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப்பூப்பறித்தற்குப்போயிறங்கினபொழுது, அங்கே (முன் நீர்நிலையில்நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலரென்னும் முனிவரது காலைப்பற்றியிழுத்து அதனாற்கோபங்கொண்டஅவரதுசாபத்தாற்) பெரிய முதலையாய்க்கிடந்தஹூஹூ என்னுங் கந்தருவன் அவ்யானையின்காலைக் கௌவிக்கொள்ள, அதனைவிடுவித்துக் கொள்ளமுடியாமற் கஜேந்திரன் ஆதிமூலமேயென்று கடவுளைக்கூவியழைக்க, உடனே திருமால் ஸ்ரீகருடவாகநாரூடராய் அங்கு எழுந்தருளித் தமதுசக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத்துணித்து யானையைஅதன்வாயினின்றும்விடுவித்து அருள்செய்தன ரென்பது கதை. (611) 110.-தருமன்கடோற்கசனுக்குப் பூமாலைமுதலியன கொடுத்துவிடைக்கொடுத்தல். தொடைகொடுத்தளகைநாதனன்றுதவு துகில்கொடுத்துமதி முத்தவெண், குடைகொடுத்துநவமணிகொடுத்தமரி லென்றும்வென்றிதரு கொற்றவெம், படைகொடுத்தடலரக்கனுக்குயர் பதங் கொடுத்துமிகுபரிவுடன், விடைகொடுத்தனனனந்தரஞ்சமர வீர வாகைபுனைவேலினான். |
(இ - ள்.)(என்றுகூறி), சமரம் வீரம் வாகை புனைவேலினான்- போரில் வீரத்தன்மைக்கு அடையாளமானவெற்றிமாலையையணிகிற வேலாயுதத்தையுடைய யுதிட்டிரன், அடல் அரக்கனுக்கு-வலிமையையுடைய இராக்கதனாகியகடோற்கசனுக்கு, தொடை கொடுத்து-பூமாலையைக் கொடுத்து, அளகை நாதன் அன்று உதவு துகில் கொடுத்து - அளகாபுரிக்கு அரசனானகுபேரன் அன்றையதினம் |