பக்கம் எண் :

386பாரதம்ஆரணிய பருவம்

யொற்றத், துடக்கியநடையது துணங்கை யாகும்"என்றது காண்க.
விநாழிகை=விநாடிகா.  அது, காலநுட்பங்களுள் ஒன்று.  பொழுதினில்
லிடிம்பவனம், லகரமெய்-விரித்தல்.  'புழைகொள்வாயினான்'என்ற
பாடத்துக்கு - பெருந்துளையைக்கொண்டவாயையுடையவனென்க. (613)

வேறு.

112.-நந்திசேனவனத்து அருச்சுனன் வானினின்று
வந்து சேர்தல்.

அப்பொழுது வானுலக மதனினிடை நின்று
மைப்பொலியு மேனிவிச யன்வனம டைந்தான்
செப்பரிய வைவர்களுந் தேவியுட னேயவ்
ஒப்பரிய தெய்வவன மொன்றின ருறைந்தார்.

     (இ-ள்.) அபொழுது - அந்தக்காலத்தில், மை பொலியும் மேனி
விசயன் - மேகம்போல விளங்குங் கரிய உடம்பின்நிறத்தையுடைய
அருச்சுனன், வான்உலகம் அதனினிடை நின்று-தேவலோகத்திலிருந்து,
வனம் அடைந்தான் - அவ்வனத்தில் வந்துசேர்ந்தான்;செப்பு அரிய
ஐவர்கள்உம் - சொல்லுதற்கு அருமையான (சிறப்பையுடைய)
பஞ்சபாண்டவர்களும், தேவியுடனே - (தங்கள்) மனைவியான
திரௌபதியுடனே, அ ஒப்பு அரிய தெய்வம் வனம்-உவமையில்லாத
தெய்வத்தன்மையுள்ள அந்தச் சிறந்தவனத்திலே, ஒன்றினர்உறைந்தார் -
ஒருங்குகூடிவசித்தார்கள்;(எ - று.)

    இது-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற கலிவிருத்தம்.

     வீமன்இரண்டாம்முறை சென்றது பூக்கொணர்தலையேமுக்கியமாகக்
கொண்டதன்று:கந்தமாதனபருவதத்தில் அச்சமின்றிச் சஞ்சரிக்கமுடியாதபடி
யட்சராட்சசர்களுடையஉபத்திரவம் மிக்கிருந்ததனால்
அந்தஉபத்திரவத்தைப்போக்குதலையேமுக்கியமான அமிசமா
கக்கொண்டதாகு மென்பது முதனூலாற் பெறப்படும்.             (614)

மணிமான்வதைச்சருக்கம் முற்றிற்று.

-----

ஆறாவது

துருவாசமுனிச்சருக்கம்

     துருவாசமுனிவனைப்பற்றியசருக்கம் என்று விரியும்:இரண்டாம்
வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்கதொகை. துருவாசன் என்ற சொல்
- தன் குணங்களைளறைத்திருப்பவனென்று பொருள்படு மென்ப.  துருவாச
முனிவன் துரியோதனனேவலால் பாண்டவரிடம் விருந்தாகவந்து
ஸ்ரீக்ருஷ்ணாநுக்கிரகத்தால்அமிருதம் புசித்த