பக்கம் எண் :

394பாரதம்ஆரணிய பருவம்

வாயிலே, வைத்தான்-இட்டுச்சுவைத்தான்: வந்து -(தருமனுள்ள இடத்து) வந்து,
சுனையில்-சுனையிலே(நீராடிவிட்டு), வந்தனைசெய்- மாத்தியான்னிகசந்தியின்
வந்தனையைப்புரிகின்ற, மறையோர் எவர்உம்- இருடியரெல்லாரும், வாரிதி -
பாற்கடல், முன் தந்த - முன்பு தன்னிடத்திலுண்டாக்கிக்கொடுத்த, அமுது -
தேவாமிருதத்தை, உண்டவர்போல-உட்கொண்டவர்போல, தாபம் தணிந்து -
பசிக்கனலாலாகிய வெப்பம் நீங்கி, தண்ணென்றார்- உடல் குளிரப்
பெற்றார்கள்;(எ-று.)

    பசியாயிருக்கையில் உடம்பில் சாடராக்கினியால் வெப்பம் உண்டாதல்,
இயல்பு.  அரக்கர் பிரமதேவனிடத்தினின்று பறித்துச் சென்ற வேதங்களைத்
திருமால் மீட்டுவந்து ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு மீண்டும் அருளியதை
யுட்கொண்டு 'சதுர்மறையுமன்னமாகியருள்செய்தோன்'என்றார்.        (625)

12.-க்ருஷ்ணனால்யுதிட்டிரன் தீமையினின்று
தப்பினாரென்றுநிச்சயித்துத் துருவாசன் தருமனிடம்
மீண்டு வருதல்.

உதரங்குளிர்ந்துவடிவுகுளிர்ந் துள்ளங்குளிர்ந்துமறைநாறும்
அதரங்குளிர்ந்துகண்குளிர்ந்தாங் கருமாமுனிவனதிசயித்து
மதரஞ்சனக்கட்டிருவாழு மார்போன்மாயாவல்லபத்தால்
இதரங்கடந்தானுதிட்டிரனென் றிவன்பான்மீண்டுமெய்தினனால்.

     (இ-ள்.)உதரம் குளிர்ந்து - (பசிக்கனல் அவிந்தமையால்) வயிறு
குளிர்ந்து, வடிவு குளிர்ந்து - கோபவடிவமும் மாறி, உள்ளம் குளிர்ந்து -
மனங்குளிர்ந்து, மறை நாறும் அதரம் குளிர்ந்து-வேதம் வெளிப்படுகின்ற
வாயும் குளிர்ந்து, கண் குளிர்ந்து ஆங்கு-கண்களிலும் வெப்பமானபார்வை
மாறி(க் குளிர்ந்த பார்வை தோன்றிய) அப்போது, அரு மா முனிவன்-
பிறர்க்கரிய பெருமையையுடைய துருவாசமுனி, அதிசயித்து - வியப்படைந்து,
'மதர்அஞ்சனம் கண் திரு வாழும் மார்போன்-மதர்த்த மைதீட்டப்பெற்ற
கண்களையுடையதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய, மாயா
வல்லபத்தால் - மாயையின் திறனால்,உதிட்டிரன் - தருமபுத்திரன், இதரம் -
தீங்கினின்றும், கடந்தான் - தப்பினான்',என்று-என அறுதியிட்டு, இவன்
பால் - (தான் உண்ணவருவதாகச் சொல்லிச்சென்ற) இந்தத்
தருமபுத்திரனிடத்தில், மீண்டுஉம்-மறுபடியும், எய்தினன்-வந்துசேர்ந்தான்;
(எ-று.)

    இதரம்-(நன்மையைக்)காட்டிலும்வேறானது:தீங்கு;பகையென்றும்,
மரணமென்றுங்கொள்வாருமுளர்.  சொற்பொருட்பின்வருநிலை.

13.-துருவாசமுனிவன்தருமனைப்பாராட்டிப்பேசுதல்.

உண்டோமுண்டோமும்பருக்கு முதவாவோதக்கடலமுதம்
கண்டோமுன்னாலெவ்வுலகுங்காணாமுகுந்தன்கழலிணைகள்
வண்டோலிடுந்தார்ப்பேரறத்தின் மகனேயுன்னையரசென்று
கொண்டோரல்லாலெதிர்ந்தோரில் யாரேவாழ்வார் குவலயத்தில்.