பக்கம் எண் :

துருவாசமுனிச்சருக்கம்395

மூன்று கவிகள் -ஒருதொடர்

     (இ-ள்.) வண்டு- வண்டுகள், ஓலிடும் - (தேனைக்குடித்து
அந்தக்களிப்பால்) ரீங்காரஞ்செய்கின்ற, தார் - குவளைமலர்மாலையையணிந்த,
பேர் அறத்தின் மகனே - பெருமைபெற்ற தருமனுடைய குமாரனே!
உம்பருக்குஉம் உதவா-தேவர்கட்கும் (எளிதிற்) கிடைக்கப்பெறாத,ஓதம் கடல்
அமுதம் - பெருக்கைக்கொண்ட பாற்கடலினின்றுதோன்றிய அமுதம்போன்ற
உணவை, உண்டோம்உண்டோம்-உண்டவர்போலப்பெருந்திருத்தி
யடைந்தோம்:எ உலகுஉம் காணாமுகுந்தன் கழல் இணைகள்.
எந்தஉலகத்தவருங்காணக் கிடைத்தற்கு அரிய முகுந்தனுடைய
உபயபாதங்களை, உன்னால்-, கண்டோம் - தரிசிக்கப்பெற்றோம்;
உன்னை-,அரசுஎன்று - அரச னென்று, கொண்டோர் அல்லால் -
ஏற்றுக்கொண்டு பாராட்டுபவரேயல்லாமல், எதிர்ந்தோரில் - மாறுபட்டவரில்,
குவலயத்தில் யார் ஏ வாழ்வார் - இந்தப்பூமியில் வாழ்பவர் எவர்தாம்?
[எவருமிலர்];

     துரியோதனன்உன்னைஅரசுஎனக் கொள்ளாது எதிர்தலால் அவன்
கெடுவான்என்றபொருளைச்சாமானியமாகக் கூறியஇது தெரிவிப்பதனால்,
இச்செய்யுள் - பிறிதினவிற்சியணி.  பாண்டவ பட்சபாதியான ஸ்ரீக்ருஷ்ண
பகவான் வந்திருத்தலையறிந்துஅப்பிரானிடத்து அச்சத்தினால்,துருவாச
முனிவன் வலுவில் இவ்வாறு கூறுகின்றானென்க.               (627)

14.-இரண்டுகவிகள்-துருவாசன் தான் வந்த
காரணத்தைத்தெரிவித்தலைக்கூறும்.

நென்னற்புயங்ககேதனன்றன் னிலயந்தன்னிற்றீம்பாலும்
கன்னற்கட்டிமுதற்பலதீங் கனிநெய்யுடனேயினிதருந்தி
இன்னற்பசிதீர்பொழுதத்தி லென்பால்வரங்கொள்கெனவுரைப்ப
முன்னர்ப்பலவுமுரையாம லொன்றேமொழிந்தான்முடிவேந்தன்.

     (இ - ள்.)நென்னல்-நேற்று, புயங்க கேதனன் - பாம்புக்கொடியைக்
கொண்டவனானதுரியோதனன், தன் நிலயம்தன்னில் - தன்னுடைய
வாழிடத்தில் [அரண்மனையிலே],தீம் பால்உம் - இனியபாலும், கன்னல்
கட்டிமுதல் - கருப்பஞ்சாற்றுக்கட்டிமுதற்கொண்டு, பல தீங் கனி-பல இனிய
பழங்களும், நெய்யுடனே-, இனிது அருந்தி - இனிதுஉண்டு,-இன்னல் பசி-
கொடுமையையுடையபசியை, தீர் பொழுதத்தில் - (யான்) நீங்கியபொழுதில்,-
'என்பால்- என்னிடத்து, வரம்கொள்க-வரத்தைப் பெற்றுக்கொள்வாய்,'என
உரைப்ப - என்று (யானே) சொல்ல,-.முன்னர் - முதலில்தானே, பலஉம்
உரையாமல் - பலவிஷயங்களையும்சொல்லாமல், ஒன்றுஏ - ஒரு
சொல்லையே,முடி வேந்தன் - கிரீடாதிபதியான அந்தத் துரியோதனன்,
மொழிந்தான்-;(எ-று.)-துரியோதனன் மொழிந்த ஒன்று மேலைக்கவியிற்
கூறப்படும்.  எனவினவ என்றும் பாடம்.

     முன்னமேஇன்னவரங்கேட்கவேணுமென்று அறுதியிட்டிருந்ததனால்,
பலவுரைக்காமல் ஒன்றேமொழிந்தான் துரியோதன னென்க.