பக்கம் எண் :

398பாரதம்ஆரணிய பருவம்

ஏழாவது

பழம்பொருந்துசருக்கம்

     பழம்பொருந்தியதைப்பற்றிக்கூறும் சருக்கமென்க.  பழம் பொருந்து
என்பது - எழுவாய்த்தொடரும், பொருந்துசருக்கமென்பது-
வினைத்தொகையுமாம்.

    அருமையானதொருநெல்லிக்கனியைக்கண்டு திரௌபதிஅதனைப்பறித்துத்
தருமாறு கேட்க, அருச்சுனன் அதனைஅம்பினால்வீழ்த்துதலும்அருகிற்
கண்டவர்அக்கனியைப்பற்றிவரலாற்றைத்தெரிவிக்கவே,அஞ்சிஅவ்விஷயத்தைச்
சொல்லி அக்கனியை அருச்சுனன்யுதிட்டிரன்முன்னே வைக்க, யுதிட்டிரன்
என்செய்வதென்றுஆலோசித்துநகுலன்மொழிப்படியே க்ருஷ்ணபகவானைத்
தியானிக்க, அன்னான்வெளிப்பட்டு, 'நீவிர்உமதுஉள்ளத்திலுள்ள விஷயங்களை
யொளிக்காமற்சொல்வீர்களானால்இந்தப்பழம் மரத்திற் போய்ஒட்டிக்கொள்ளும்'
என்றானாக,அங்ஙனமே ஐவரும் திரௌபதியும்தம்முடையஉள்ளக்கிடக்கையைக்
கூறவே, அந்தக்கனி பறித்த இடத்திலேயொட்டிக்கொண்டதென்ற செய்தியைக்
கூறும் பகுதியென்க.  இவ்வரலாறு,இப்போது அச்சிட்டுவெளிவந்துள்ள
வடநூல்வியாசபாரதப்பிரதிகளில்எதிலும் காணப்படவில்லை.

வேறு.

1.-திரௌபதிஅமித்திரமுனிவற்கென்றுஏற்பட்டுள்ள
நெல்லிக்கனியொன்றைக் காணுதல்.

அந்நெடுவனத்திற் சின்னாளகன்றபி னமித்தி ரன்பேர்
என்னுமாமுனிவற் கென்றே யாவரு மருகு செல்லா
நன்னலமிகுந்த நெல்லி நறுங்கனி யொன்று கண்டாள்
கன்னலும்புளிக்கு மின்சொற் கயிரவங் கருகும் வாயாள்.

     (இ-ள்.) அநெடு வனத்தில்-அந்தப்பெரியகாட்டிலே, சில நாள் அகன்
பின்-சிலநாள்கழித்தபிறகு,-அமித்திரன் என்னும் பேர் மா முனிவற்கு
என்றுஏ-அமித்திரனென்றுபேர்பூண்ட சிறந்தமுனிவற்காகவே
(ஏற்பட்டிருப்பதும், அதுபற்றி), யாவர்உம் அருகு செல்லா-எவரும்
சமீபத்திற்செல்லப்பெறாததுமான,நல்நலம் மிகுந்தநெல்லி நறுங் கனிஒன்று-
சிறந்த நன்மைமிகுந்த நெல்லியின் நறுவியகனியொன்றை,-கன்னல்உம்
புளிக்கும் இன் சொல் - கருப்பஞ்சாறும் புளிப்பானதுஎன்றுசொல்லும்படி
(அவ்வளவுமிக்க) இனியசொல்லைப்பேசுகிற, கயிரவம் கருகும்-
செவ்வாம்பல்மலரும் கருநிறமுள்ளதென்றுதோன்றும்படி மிக்கசெந்நிறமுள்ள,
வாயாள்-வாயையுடையவளான திரௌபதி, கண்டாள்-;(எ-று.)-
கயிரவமனையவாயாளஎன்று பிரதிபேதம்.