பக்கம் எண் :

40பாரதம்ஆரணிய பருவம்

    (இ-ள்.)(அத்தேவமாதர்),காமனை-மன்மதனை, நினைந்தனர்-(அங்கு
வரும்படி)எண்ணினார்கள்; (எண்ணவே),காமராசன்உம் - மன்மதராசனும்,
மா மலர் வாளிஉம்-சிறந்த பூக்களாகிய அம்புகளையும், மதுரம் சாபம்உம்-
இனிப்பான (கரும்பாகிய)வில்லையும், தே மரு மலர் கையில்-தேன்
பொருந்திய தாமரைபூப்போன்ற (தன்)கைகளிலே, சேர்த்தி-எடுத்துக்
கொண்டு, சேனையோடு - (தனது)சேனையாகிய அம்மகளிர்களுடனே,
அரன்உம் அஞ்ச - (இவன்வருகிறமிடுக்கைநினைத்துச்)சிவனும்
அஞ்சும்படி, ஆம் முறை-(போருக்கு)உரிய முறைப்படியே, புகுந்தனன்-
(அருச்சுனன்தவஞ்செய்யுமிடத்துப்)பிரவேசித்தான்; (எ-று.)

     காமன் - யாவராலும் விரும்பப்படுங்கட்டழகுடையவன்:அல்லது
வேட்கையை விளைப்பவன்.  மன்மதன் இடக்கையில் வில்லையும்
வலக்கையில் அம்பையுஞ் சேர்த்தினா னென்க.  மகளிரை மன்மதன்சேனை
யென்பர்.  மலர்வாளி - அசோகமலர், தாமரை மலர், மாமலர்,
மல்லிகைமலர், நீலோற்பலமலர் என்னும் ஐந்துமாம்.  ஒரு காலத்தில்
திருக்கைலாயத்திற் பரமசிவன் சனகர் முதலியநால்வருக்கும் யோகநிலையை
உணர்த்துதல் நிமித்தம் தாம் யோகஞ்செய்து கொண்டிருக்கையிற்
பிரமனேவலால் மலரம்புகளை எய்து தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச்
சினந்து நெற்றிக்கண்ணை விழித்து அதன்நெருப்புக்கு இரையாய் உடம்பு
எரிந்து சாம்பராய்ப்போம்படி செய்தனனென்பதும், உடனே மன்மதனுடைய
மனைவியாகிய ரதி தேவி தன் கணவன் எரிக்கப்பட்டதினால் மிக வருந்திப்
பரமசிவனை அடைந்து பிரார்த்திக்க, அப்பிரான் அவளுக்குமாத்திரம்
ரூபமுடையவனாகவும், மற்றையோர்க்கு ரூபமில்லாதவனாகவும்
இருக்கும்படியும் அருள்செய்தனனென்பதும் புராணகதைகள்.  அவ்வாறு
மன்மதன் சிவபெருமானிடத்து அடிபட்டிருந்தும், அதனைமறந்தான்போல்
மிக்க மிடுக்குடன் வந்தானென்பார் 'அரனுமஞ்சவந்தான்'என்றார்.  இனி,
அரனையஞ்சுவான் என்ற பாடத்திற்கு தன்னை முன்னொருகால்
நெற்றிக்கண்ணின் நெருப்பினாற் பரமசிவன் எரித்து அழித்ததனைக் கருதி
மன்மதன் அரனை அஞ்சுவானானானென்க.                   (52)

      53. - இதுவும்அது.

செந்தமிழ்வரைதரு தேரன்செக்கர்வான்
அந்தியானையன்மதி யாதபத்திரன்
சிந்துவெம்முரசினன் செவ்விகூரவே
வந்தனன்காலமும் வசந்தமாக்கியே.

     (இ-ள்.)(மன்மதன்),செம் தமிழ் வரை - செவ்விய தமிழ் வழங்கும்
பொதியமலை, தரு - தந்த, தேரன்-(தென்றற்காற்றாகிய)
இரதத்தையுடையவனும், செக்கர் வான்-செவ்வானத்தோடுகூடிய, அந்தி-
மாலைப்பொழுதாகிய, யானையன் - யானையையுடையவனும், மதி-
பூர்ணசந்திரனாகிய, ஆதபத்திரன்-வெண்கொற்றக்குடையை யுடையவனும்,
சிந்து-கடலாகிய, வெம் முரசினன்-(பகைவர்களுக்குக்