செயலைப்)பார்த்தவர், இப்போது-,காணில்- (அமித்திரமுனிவன்) கண்டால், இறுத்தோன் - (இதனை)எய்துவீழ்த்தியவன், ஏமுற என் படும்- கலக்கமுண்டாகுமாறு என்ன ஆபத்துக்குஉள்ளாவனோ?,என்றார்- என்று சொன்னார்கள்;(எ-று.) சோமகன் -பாஞ்சாலதேசத்து மன்னவன்: அவனது வமிசத்தவர் - சோமகர். கண்டோர்என்றது - ஆச்சிரமத்து வசிப்பவரான இருடியரை. இது மேற்கவியிற் பெறப்படும். சொல்லுமுனமித்திரப்பேர்என்று பிரதிபேதம். (634) 4.-அதுகேட்டஅருச்சுனன் அக்கனியைத் தருமன் முன்னே வைத்துத்தான் செய்த செயலைத்தெரிவித்தல். கண்டவம்முனிவர்சொல்லக் கடவுளர்கோமான்மைந்தன் கொண்டவக்கனியைமூத்த கொற்றவன்றிருமுன்வைத்து மண்டழற்பாவைசொல்லான் மதியிலேனெய்தேனென்றான் திண்டிறற்றேவர்க்காகத் திதிமைந்தராவிகொண்டான். |
(இ-ள்.)கண்ட-(அருச்சுனன் அமித்திரமுனிவற்குஉணவான ஆமலகக்கனியை அம்பாலெய்ததைப்) பார்த்த, அ முனிவர் - அந்த இருடியர், சொல்ல - '(காணில்ஏமுற எனப்படும் இறுத்தோன்)'என்று கூறவே,-திண்திறல்தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் - மிக்கவலிமையையுடைய தேவரின் பொருட்டுத் திதி யென்பவளின் மக்களான நிவாதகவசர் காலகேயர் முதலான அசுரர்களின் உயிரைக் கவர்ந்தவனான, கடவுளர் கோமான் மைந்தன் - தேவேந்திரன்குமாரனானஅருச்சுனன், கொண்ட - (விற்கணையால்)பறித்த, அ கனியை-அந்தநெல்லிக்கனியை, மூத்த கொற்றவன் திருமுன் - (தம்மில்யாவரினும்) பெரியவனான வெற்றிபொருந்திய தருமனுடைய முன்புறத்திலே, வைத்து-,'மதிஇலேன் - விவேகமில்லாதவனானயான், மண்டு அழல் பாவை சொல்லால் - நிரம்பியவேள் வித்தீயினின்றுதோன்றிய பெண்ணானதிரௌபதியின் பேச்சைக் கேட்டு, எய்தேன்-(முனிவற்கு உணவான இந்த ஆமலகத்தை) அம்பெய்தி வீழ்த்தினேன்,'என்றான்-என்றுதெரிவித்தான்;(எ-று.) "ஸ்த்ரீபுத்தி: ப்ரளயாந்தக:"என்றவாறு பெண்புத்தியைக் கேட்டு ஆராயாது இச்செயலைச்செய்தது,ஆபத்துக்குஉள்ளாக்கிவிட்டது;இதற்கு என்செய்வதுஎன்று அருச்சுனன்வினாவியபடி. (635) 5.-தருமன்நொந்துகூறுதல். காடுறைவாழ்க்கையெய்திக் காய்கனிமூலந்தின்று நீடுறுகாலம்போக்கி நீங்கலாதிருக்குநம்மை நாடொறுமிடையூறன்றி நண்ணுவதில்லையாயின் ஏடுறுதாராய்செய்வதென்கொலென்றியம்பினானே. |
(இ-ள்.) ஏடுஉறு தாராய் - பூவிதழ்மிக்க மாலையையணிந்த அருச்சுனனே! காடு உறை வாழ்க்கை எய்தி - காட்டிலேவாழ்கின்ற வாழ்க்கையையடைந்து, காய் கனி மூலம் தின்று - காய்கனிகளையும் |