பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்401

கிழங்குகளையும்புசித்து, நீடு உறு காலம் போக்கி - மிகப்பலவான
காலத்தைக்கழித்து, நீங்கலாது - (இங்ஙன்வாழுங் காட்டைவிட்டு) நீங்காமல்,
இருக்கும் - வசிக்கிற, நம்மை-,-நாள்தொறுஉம்- நாடோறும் [அடிக்கடி],
இடையூறு அன்றி-(இனிது வாழ்வுக்கு) முரணான செயலன்றி, நண்ணுவது-
(இனிதுவாழ்க்கைக்குப்) பொருந்தியசெயல், இல்லைஆயின்-
இல்லையாகுமானால்,-செய்வது- (நான்) செய்யக்கூடியது, என்கொல் -
என்னையோ? என்று-,இயம்பினான்-(வருத்தத்தோடு)சொன்னான்;(எ-று.)

     காட்டிலும்காய்கனிகிழங்குகளையுண்டுஇனிதுவாழலாமென்றால்,
அங்ஙன்வாழவொண்ணாதபடிஏதேனும் துன்பம் வந்தபடியேயுள்ளதே!
என்னசெய்வது?  என்றுநொந்தனன் தருமபுத்திரனென்பதாம்.         (636)

6.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: அமித்திரமுனிவன்
தம்மைச்சினவாமைக்குவீமசேனன் உபாயங்கூற,
அருச்சுனன் மீளச்சொல்லலுறுதல்.

அவ்வுரைவீமன்கேட்டாங் கமித்திரன்வந்தபோதே
இவ்வுரைகேட்கினம்மை யெரியெழச்சபித்தறிண்ணம்
வெவ்வுரையுரையாமுன்ன மெய்ம்முனிதன்னைப்போற்றிச்
செவ்வுரைகூறினம்மைச் சீறுமோசீறல்செய்யான்.

     (இ-ள்.) அஉரை-(தருமன் கூறிய) அந்தப்பேச்சை, வீமன்-,கேட்டு -
செவியேற்று, ஆங்கு - அவ்விடத்தே, அமித்திரன் வந்த போதே-,-இ
உரை கேட்கின் - (ஒருவன் அம்பெய்து உணவான நெல்லிக்கனியை வீழ்த்தி
எடுத்துப்போனான்என்ற) இந்தவார்த்தையைக் கேள்வியுற்றால்,-நம்மை-,
எரி எழ-கோபாக்கினி வெளிப்பட, சபித்தல்-சபிப்பது, திண்ணம்-நிச்சயம்:
வெவ் உரை - கொடிய சாபவார்த்தையை, உரையா முன்னம்-(அம்முனிவன்)
சொல்வதற்கு முன்னம், மெய் முனி தன்னை-உண்மையுள்ள
அமித்திரனென்ற அம்முனிவனை, போற்றி-துதித்து, செவ்உரை-செம்மையான
உரையை, கூறின் - (நாம்) சொன்னோமேயானால்,நம்மை-,சீறும்ஓ -
(அம்முனிவன்) சினங்கொள்வானோ? சீறல் செய்யான் -
சினங்கொள்ளமாட்டான்;(எ-று.)

     செவ்வுரை -கோபங்கொள்ளாது அநுக்கிரகஞ்செய்யுமாறு
வேண்டிக்கொள்ளும்உரை.  வற்புறுத்துமாறு 'சீறுமோ? சீறான்'என்று
வினாவும்விடையுமாகக் கூறுகிறான். வெவ்வுரை யுரையா முன்னம்-
உணவான நெல்லிக்கனியை ஒருவன்பறித்துச் சென்றானென்றகடியபேச்சை
ஆச்சிரமவாசிகளான முனிவர் அந்த அமித்திரனிடங் கூறுதற்குமுன்னம்
எனினுமாம்.                                          (637)

7.பொறுத்திடுமேலிடாவைம் புலத்தினனாதலாலே
மறுத்திடானையநின்றன்மாசிலாவாய்மையென்ன
நிறுத்திடுந்துலையோடொப்பானினைவினுக்கிசையத்
                               தெவ்வைச்
செறுத்திடுவிசயன்மீளச் செப்பினன்செப்பமாக.