(இ-ள்.)(அம்முனிவன்), மேலிடா ஐம்புலத்தினன்-மீறுதலில்லாத [தனக்குவசப்பட்ட]ஐம்புலன்களையுடையவன்:ஆதலாலே-,பொறுத்திடும் - (நம் பிழையைப்) பொறுப்பான்: ஐய-ஐயனே! நின்தன்-உன்னுடைய, மாசுஇலா - குற்றமில்லாத, வாய்மை - வாய்ச்சொல்லை,மறுத்திடான் - மறுத்துச்சொல்லான்: என்ன - என்று (வீமன்) சொல்ல,-நிறுத்திடும் துலையோடுஒப்பான்- (பண்டங்களை)நிறுக்கின்ற தராசின்முள்ளையொத்துநடுநிலையில்நிற்பவனாகியதருமபுத்திரன், நினைவினுக்கு- (வீமசேனனுடைய) எண்ணத்திற்கு, இசைய- உடன்பட்டிருக்க,-தெவ்வைசெறுத்திடு விசயன் - பகை வரையொழிக்கவல்ல அருச்சுனன், மீள-,செப்பம்ஆக - நேர்மையாக, செப்பினன் - சொல்லலானான்;(எ-று.)-அதனைமேற்கவியிற் காண்க. நெல்லிக்கனியைத் தருமன் முன்னேவைத்து முன்னே சில சொல்லிய விசயன் இப்போது தனக்குத்தான் தீங்குநேரு மென்று கூறுவதனால், 'விசயன்மீளச் செப்பமாகச் செப்பினன்'என்றது.நிறுத்திடுந்துலை யோடொப்பான்நினைவினுக்குஇசையஎன்ன என்றுஇயைப்பினுமாம். (638) 8.-அருச்சுனன்'என்னொருவனையன்றிமற்றையோரை முனிவன் சபியானாதலால்,நீவிர் அஞ்சவேண்டாமே' எனில். செய்தவனினிதுமாந்தத் தேவர்நாளொன்றுக்கொன்றாம் கைதவமில்லாநெல்லிக் கனியினைக்கருதுறாமல் எய்தவென்றன்னையன்றியாரையுமிடான்வெஞ்சாபம் மெய்தவறாதசொல்லாய்வெருவுதலென்கொலென்றான். |
(இ-ள்.)'மெய்தவறாதசொல்லாய்-உண்மையினின்று தவறாத சொல்லையுடையவனே! செய் தவன் - தவஞ்செய்யுமியல்பினனான அமித்திரமுனிவன், இனிது மாந்த-நன்குஉண்ணும்படி, தேவர்நாள் ஒன்றுக்கு ஒன்றுஆம்-தேவர்களின்நாளாகிய ஒருவருஷத்திற்கு ஒரு கனி வீதம்தோன்றுகின்ற, கைதவம் இல்லா-துன்பமில்லாத [உண்டார்க்கு இன்பமளிக்கிற],நெல்லி கனியினை-நெல்லியின்பழத்தைப்பற்றி, கருதுறாமல்-எண்ணாதே,எய்த - அம்பினால்வீழ்த்திய,என் தன்னை அன்றி-என்னையல்லாமல்,யாரைஉம்-(வேறு) எவர்மீதும், வெம் சாபம் இடான் - கொடுஞ்சாபச் சொல்லைஇடமாட்டான்: (ஆகவே), வெருவுதல்- (நீவிர் அம்முனிவன் சபிப்பானேஎன்று) பயப்படுவது, என்கொல்-என்ன காரணம்பற்றி?'என்றான்- என்றுவினாவினான்;(எ-று.) ஆண்டுக்குஒருமுறைதோன்றும் இந்தநெல்லிக்கனியை அமித்திரமுனிவன் உண்டானாயின்இன்னும்ஓர் யாண்டுவரையிலும் பசியென்பது அம்முனிவனைநணுகாதபடி செய்யவல்ல தென்பான் "கை தவமில்லாநெல்லிக்கனி"என்றான். மனிதர்க்குஓரியாண்டு தேவர்க்கு ஒருநாளென்று நூல்கள் கூறும். எய்தவன்றன்னையன்றிஎன்று பிரதிபேதம். (639) |