துருவாசமுனிவனதுசாபத்தினின்று தப்பும்படி முன்பு ஒரு முறை க்ருஷ்ணணை நினைத்தமையால், 'இன்னம் திகிரியானைச் சிந்தனைசெய்தி' என்றான். (641) 11.-சகதேவன்வார்த்தை. விளைதவமுனிவன்கண்டு வெகுளுமுனவன்றாள்போற்றிக் கிளைபடுநெல்லிவாசக் கேழுறுகனிமுன்வைத்தால் உளைவுறமுனியானம்மை யுறுதிமற்றிதுவேயென்னா இளையவன்றானுந்தம்மு னினைவினுக்கேற்பச்சொன்னான். |
(இ-ள்.) 'விளைதவம் முனிவன் கண்டு வெகுளும்முன்-முதிர்ந்த தவத்தையுடைய அமித்திரமுனிவன் (தனக்குஉணவானநெல்லிக் கனிபறியுண்டதைக்) கண்டு கோபித்துக்கொள்வதற்குமுன்னம், அவன் தாள் போற்றி - அம்முனிவனுடைய திருவடிகளிலேநின்று துதித்து, கிளை படு நெல்லி வாசம் கேழ் உறு கனி-கிளையிலே தோன்றிய நெல்லியின் நறுமணமுள்ள நன்னிறம் பொருந்திய பழத்தை, முன்-(அம்முனிவனுடைய) முன்னே, வைத்தால்-, (அம்முனிவன்)) உளைவு உற நம்மை முனியான் - மனத்தில்வருத்தமுண்டாக நம்மைச் சினவான்: மற்று-இனி, உறுதிஇதுவே-,' என்னா-என்று இளையவன் தான்உம்-சகதேவனும், தம்முன் நினைவினுக்கு- தமது அண்ணனான தருமபுத்திரனுடையஎண்ணத்திற்கு, ஏற்ப-இசையுமாறு, சொன்னான்-; (எ-று.) தருமபுத்திரன்முதலிற்கொண்டநினைவுமுனிவன்வெகுளுதற்கு முன்னம் அவனைத்துதித்து இக்கனியைஅவன்முன்வைத்திட்டால் அவன்வெகுளானென்பது:இதனை,ஏழாங்கவியால் அறியலாம். நகுலன் கூறியதைக் கேட்டதும் அவ்வெண்ணம் தருமபுத்திரனுக்கு மாறியதென்க. அவன் - க்ருஷ்ணனென்பாரு முளர். (642) 12.-திரௌபதிகூறுதல். பெண்மொழிகேளாரென்றும் பெரியவரெனக்கொண்டிந்த மண்மொழிவார்த்தைபொய்யோ வருத்தநீருற்றவெல்லாம் எண்மிகவெண்ணின்முன்ன மென்பொருட்டன்றோவென்று கண்மலரருவிசோரக் கனற்பிறந்தாளுஞ்சொன்னாள். |
(இ - ள்.)'என்றுஉம்பெரியவர் பெண்மொழி கேளார் எனக் கொண்டு இந்த மண்மொழி வார்த்தை பொய்ஓ-எப்போதும் பெரியவர் பெண்மொழியைக்கேட்டுநடவார் என்று இந்தஉலகோர் சொல்லுகிறவார்த்தை பொய்யாகுமோ?[ஆகாதே]:முன்னம் நீர் உற்ற வருத்தம் எல்லாம்-முன்பு நீங்கள் அடைந்த வருத்தங்களெல்லாவற்றையும் பற்றி, எண் மிக எண்ணின்- மனத்தில் நன்கு ஆராய்ந்தால், என் பொருட்டுஅன்றுஓ - என்பொருட்டாகவல்லவா விளைந்தது?'என்று-, கண்மலர்-மலர்போன்ற கண்களினின்று, அருவி சோர-நீர்ப்பெருக்குச் சிந்த, கனல்பிறந்தாள்உம்- தீயினின்றுதோன்றினவளான திரௌபதியும், சொன்னாள்-;(எ-று.) |