பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்405

    எண்-எண்ணுதற்குக் கருவியானது:மனம், மண் - மண்ணுலகோர்க்கு,
ஆகுபெயர்.  பெண்மதிகொள்ளா ரென்றுபிரதிபேதம்.          (643)

13.-எல்லார்வார்த்தையையுங்கேட்டபின் நகுலன்சொல்
லேமுறையான தென்றுதருமன் ஸ்ரீக்ருஷ்ணனைநினைக்க,
அப்பெருமான் வருதல்.

தம்பியர்தாமும்வேள்வித் தையலுமுரைத்தமாற்றம்
கிம்புரிநெடுங்கோட்டம்பொற் கிரிவல்லோன்கேட்டபின்னர்
வெம்பரிநகுலன்சொல்லே விதியெனக்கருதியப்போது
எம்பெருமானையுன்னவிவனெதிரவனும்வந்தான்.

     (இ - ள்.)கிம்புரி நெடுங் கோடு அம் பொன் கிரி வல்லோன்-
பூண்கட்டிய நீண்ட தந்தங்களையும்அழகியபொன்னாபரணங்களையுமுடைய
மலைபோன்றயானையைச்செலுத்துவதில்வல்லவனானதருமன்,-தம்பியர்
தாம்உம்-தம்பிமார்களும், வேள்விதையல்உம்-யாகாக்கினியில் தோன்றிய
பெண்ணானதிரௌபதியும், உரைத்த-சொன்ன, மாற்றம் - வார்த்தையை,
கேட்டபின்னர்-,-வெம் பரி நகுலன்சொல்ஏ விதி என-விரைந்து செல்லவல்ல
குதிரைத்தொழிலில்வல்லநகுலனுடைய சொல்லே செய்தற்கு உரியதுஎன்று,
கருதி-நினைத்து,-அப்போது-,எம்பெருமானைஉன்ன - ஸ்ரீக்ருஷ்ணனை
நினைக்க,இவன்எதிர்-இந்தத்தருமபுத்திரனெதிரிலே, அவன் உம் வந்தான்-
அந்தஸ்ரீக்ருஷ்ணனும் வந்தான்;(எ - று.)

    அமித்திரமுனிவன் சினப்பதற்குமுன்னே அவனைத்துதித்துஇக்கனியை
அவன்முன்வைத்துப் பொறுக்குமாறு வேண்டிக்கொள்வது என்ற
இதைக்காட்டிலும், ஸ்ரீக்ருஷ்ணனைத்தியானித்துஅவனிடத்தே
முனிவனைக்கோபியாதவாறுசெய்யும்பொறுப்பை விடுவது
தவறாதுபயனைவிளைக்குமென்பதைத்துருவாசமுனிசரிதையிற் கண்கூடாகக்
கண்டா னாதலால்,தருமன் 'நகுலன்சொல்லேவிதி'என்றான். கிரிக்குக்
கிம்புரிநெடுங்கோடுஎன்று அடைமொழிகொடுத்ததனால்,யானையாறிற்று.(644)

வேறு.

14.-தருமன் ஸ்ரீக்ருஷ்ணனைக்கண்டுசேவித்துத் தமக்கு
நேர்ந்துள்ள இடரைத்தெரிவித்தல்.

கண்டிரு கண்ணு மிதயமுங்களிப்பக் கட்செவிப் பேரணை
                                       மறந்து,
வண்டுவ ரையின்வாழ் தண்டுழாய் மாலைமாதவன் வருதலு
                                 மெதிர்கொண்டு,
அண்டரு மிறைஞ்சற் கரியதா ளிறைஞ்சி யாங்குறு மிடரினை
                                      யவற்குத்,
திண்டிற லறத்தின் றிருமக னுரைப்பத் திருச்செவி சாத்தினான்
                                     செப்பும்.

     (இ-ள்.)கட்செவி பேர் அணைமறந்து-ஆதிசேஷனாகியசிறந்த
படுக்கையை மறந்திட்டு [படுக்கையைவிட்டிட்டுஎன்றபடி],
வள்துவரையின்வாழ்-வளப்பமுள்ள துவாரகாபுரியிலே வசிக்கின்ற,தண்