முன்னம், கொல்லுதல்புரிந்தோயென்றனன்முரசங் கோட்டியகொற்ற வெங்கொடியோன். |
(இ - ள்.)முரசம் கோட்டிய கொற்றம் வெம் கொடியோன் - முரசின் வடிவத்தை யெழுதிய வெற்றிபொருந்திய விரும்பத்தகுந்த கொடியையுடைய தருமபுத்திரன், (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),'அலகைஆம்அன்னையை முன்னம் கொல்லுதல் புரிந்தோய் - (தான்) பேயாயிருந்தும் தாயின்வடிவுகொண்டுவந்தவளான பூதனையைமுன்பு (அவள்முலையையுண்கிறவியாஜத்தால்உயிரையுறிஞ்சிக்) கொன்றவனே! அறம்உம் மெய்ம்மைஉம் பொறைஉம்-தருமமும் சத்தியமும் பொறுமையும், மேகம்மேனியன்உம் - மேகம்போற் கருநிறமுள்ள திருமாலும், வெல்லுக-: பாவம்-பாவமும், பொய் மொழி-பொய்ம்மொழியும், கோபம்-கோபமும், தெயித்தியர் குலம் - அசுரர்குலமும் (என்றஇவை),வெல்லாமல்செல்லுக- வெல்லாமற் போகுக [தோற்க],என-என்று, தெளிவு உற்று-தெளிவுபொருந்தி, அல்உம்வெம் பகல்உம்-இரவிலும் வெவ்விய பகற்போதிலும், என் மனம் நிகழும்-என் மனத்தில் (இவ்வெண்ணம்) இடைவிடாதிருக்கும்,'என்றனன்- என்று கூறினான்;(எ - று.) இச்செய்யுளின்கருத்தைக் கொண்ட வடமொழிச்சுலோகம்-"தர்மோ ஜயது நாதர்ம:-ஸத்யம்ஜயது நாந்ருதம் [க்ஷமாஜயதுநக்ரோத:- விஷ்ணுர்ஜயது நாஸு ர:"என்பது. இக்கொள்கை, நகுலன் கூறியது என்று கன்னடபாரதத்திலுள்ளது. (647) 17.-வீமன்தன்மனத்திலுள்ளதைக் கூறுதல். பிறர்மனையவரைப்பெற்றதாயெனவும்பிறர்பொருளெட்டியே யெனவும், பிறர்வசையுரைத்தல்பெருமையன்றெனவும் பிறர்துயரென் றுயரெனவும், இறுதியேவரினுமென்மனக்கிடக்கையெம்பிரானிவையென வுரைத்தான், மறலியுமடியுமாறுமல்லியற்கை வலிமைகூர்வாயு வின்மைந்தன். |
(இ -ள்.)மல்-மற்போரில், மறலிஉம்-யமனும், மடியும்ஆறு- இறந்துபடும்படி, இயற்கை வலிமை கூர் - இயற்கையான உடல் வலிமை மிகுந்த, வாயுவின் மைந்தன் - வாயுவின்குமாரனானவீமன்,- (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-'எம்பிரான்-எம்பெருமானே!இறுதிஏவரின்உம்- மரணம்நேர்வதானாலும்சரி,பிறர் மனையவரை-பிறர்மனைவிமாரை,பெற்ற தாய்எனவும்-, பிறர் பொருள் - அயலாருடைய சொத்தை, எட்டி ஏ எனஉம்-எட்டிக்கொட்டை யெனவும், பிறர்வசை உரைத்தல் - அயலாரைக் குறித்துத் திட்டுமொழியைக்கூறுதல், பெருமைஅன்று-பெருமையைத் தருவதாகாது[சிறுமையையேதருவதாகும்],எனவும்-,-பிறர் துயர் - அயலார்க்குநேருந் துன்பத்தை, என் துயர் எனஉம்- என்னுடையதுன்பமெனவும், இவை-, என் மனம் கிடக்கை- என்மனத்துக்கிடக்கும்விஷயங்களாகும், 'என-என்று,உரைத்தான்- (தன்மனக்கிடக்கையைக்) கூறினான்;(எ-று.) |