19.-நகுலன் கூறுதல். குலமிகவுடையரெழின்மிகவுடையர் குறைவில்செல்வமு மிகவுடையர், நலமிகவுடையரென்னினுங்கல்வி ஞானமற்பமுமிலாதவரை, வலமிகுதிகிரிச்செங்கையாய்முருக்கின்மணமிலாமலரென மதிப்பேன், சலமிகுபுவியிலென்றனன்வாகைத் தார்புனைதாரைமாவல்லான். |
(இ - ள்.)வாகை தார் புனை-வெற்றிமாலையையணியவல்ல, தாரை மா வல்லான்-தாரையையுடைய குதிரையோட்டுந்தொழிலிலே வல்லவனான நகுலன்,-(ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-வலம்மிகு - வெற்றி பொருந்திய, திகிரி- சக்கரப்படையை, செங்கையாய்-சிவந்ததிருக் கைகளிலுடையவனே! சலம் மிகு புவியில்-நிலையாமைமிக்கஇந்த உலகத்திலே, (ஒருவர்),-குலம் மிஉடையர் - சிறந்த உயர் குடிப்பிறப்பினையுடையவர்:எழில் மிகஉடையர் - மிக்கஅழகினையுடையவர்:குறைவு இல் செல்வம்உம்மிக உடையவர் - குறைவில்லாத மிக்கசெல்வமும் உடையவர்:நலம் மிக உடையர் - நற்காரியங்களைமிகுதியாக வுடையவர்:என்னின்உம் - என்றாலும்,கல்வி ஞானம்-கல்வியினாலாகியஅறிவு, அற்பம்உம் இலாதவரை-சிறிதும் இல்லாதமானுடரை, முருக்கின் மணம் இலா மலர்என-பலாச மரத்தின் வாசனையில்லாத[பார்வைக்குமாத்திரம்அழகாகத்தோன்றுகிற]மலர்போல, மதிப்பேன்-எண்ணுவேன்;(எ - று.) மலருக்குப்சிறப்பு, மணத்தினாவது:அவ்வகைமணமின்றிப் பார்வைக்குப் பகட்டான மலர் மதிப்பைப் பெறாதவாறுபோல,குலநலம் முதலியன இருந்தும் கல்வியறிவில்லாதவர் என்னால்மதிக்கப்பெறா ரென்றவாறு. உவமையணி. கல்வியறிவு - பரப்பிரமத்தைப் போதிக்கும் வித்தையினாலானஅறிவு என்னலாம். தாரை-குதிரை நடைப்பொது:இனி, நேரோடுங் குதிரைநடையென்றலும் உண்டு:வடசொல். சலம்-நீரென்றும் வஞ்சனையென்றும்உரைத்தலும் ஆம். 20.-சகதேவன்கூறுதல். ஒருமொழியன்னைவரம்பிலாஞானமுற்பவகாரணனென்றும், தருமமேதுணைவன்கருணையேதோழன்சாந்தமேநலனுறுதாரம், அரியதிண்பொறையேமைந்தன்மற்றிந்தவறுவருமல்ல தாருறவென்று, இருவரிலிளையோன்மொழிந்தனன்றன்பேரிதயமாமலர்க் கிடையெடுத்தே. |
(இ-ள்.)இருவரில் இளையோன்-இரட்டையரானநகுலசகதேவர்களில் தம்பியான சகதேவன்,(கிருஷ்ணனைநோக்கி)-'ஒருமொழி-சத்தியவார்த்தை, அன்னை-தாய்:வரம்பு இலா ஞானம் - அளவுபடாத அறிவு, உற்பவம் காரணன்-பிறவிக்குக்காரணமான பிதா:என்றும்-, தருமம்ஏ-, துணைவன்- உடன்பிறந்தவன்:கருணைஏ- கருணையென்பதுவே,தோழன்-சினேகிதன்: சாந்தம்ஏ நலன்ஊறு தாரம்-சாந்தகுணமே அழகுபொருந்திய மனைவி:அரிய திண் பொறைஏ மைந்தன் - (ஒருவற்குஉண்டாவதற்கு) அரிய வலியபொறுமையே குமாரனாவன்:இந்த அறுவர்உம் அல்லது - இந்த ஆறுபேரையும் அல்லாமல், மற்று ஆர் - வேறு யாவர், உறவு - உறவினர்? [வேறு |