எவரும்உற்றஉறவினரல்லர்]'என்று-,தன்-தன்னுடைய, பேர் இதயம் மா மலர் கிடை - பெரிய சிறந்த மனத்தாமரையிலுள்ளதை, எடுத்து-, மொழிந்தனன்-சொன்னான்;(எ-று.) இந்தச்செய்யுளின் பொருளைக்கொண்டுவழங்கும்வடமொழிச் சுலோகம்-"ஸத்யம்மாதாபிதாஜ்ஞாநம், தர்மோ ப்ராதா தயா ஸகா | ஸாந்தி: பத்நீ க்ஷமாபுத்ர:ஷடேதே மம பாந்தவா:-"என்பது. ஒருமொழி- எப்பொழுதும் வேற்றுமைப்படுதலில்லாத மொழி: எனவே, சத்தியமானசொல் என்றாயிற்று.நலனுறுதாரம் - கணவனுக்கு நன்மையைச் செய்கின்ற மனைவி. (651) 21.-திரௌபதிகூறுதல். ஐம்புலன்களும்போலைவரும்பதிகளாகவுமின்னம்வேறொருவன் எம்பெருங்கொழுநனாவதற்குருகுமிறைவனேயெனதுபேரிதயம் அம்புவிதனிற்பெண்பிறந்தரெவர்க்கு மாடவரிலாமையினல்லால் நம்புதற்குளரோவென்றனள்வசிட்டனல்லறமனைவியேயனையாள். |
(இ-ள்.)'இறைவனே-கடவுளே!ஐம் புலன்கள்உம் போல்- (ஐம்பொறிகட்கு இன்பத்தையளிக்கின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்) ஐந்துவிஷயங்கள்போல் (இன்பத்தையளிப்பவரான), ஐவர்உம்- பாண்டவரைவரும், பதிகள் ஆகஉம் - கணவராக அமைந்திருக்கவும், இன்னம் வேறுஒருவன் - இன்னும் வேறே ஆறாமவனொருத்தன்,எம் பெருங் கொழுநன் ஆவதற்கு-எனது சிறந்தகணவனாகஆவதற்கு, எனது பேர் இதயம் - எனது பெருமைபெற்ற மனம், உருகும்-(ஆசை மிகுதியால்) உருகுந்தன்மையையடையும்:அம் புவிதனில்-அழகிய பூமியில், பெண் பிறந்தவர் எவர்க்குஉம்-பெண்ணாகப்பிறந்தார்யாவர்க்கும், ஆடவர் இலாமையின் அல்லால்-(தாம் விரும்பியபோது தம்விருப்பின்படி) ஆடவர் கிடைக்கப்பெறாமையினாலல்லாமல்,நம்புதற்கு - (இவர் பதிவிரதையராவர்என்று) நம்பிச் சொல்லுதற்கு, உளர்ஓ - (தக்கவராக எவரேனும்) உள்ளனரோ?[இல்லையென்றபடி],'என்றனள் - என்று கூறினாள்;(யாவளெனில்),-வசிட்டன் நல் அறம் மனைவிஏஅனையாள்- வசிட்டனுடைய சிறந்த தருமபத்தினியாகிய அருந்ததியைப்போன்றவளாகிய திரௌபதி;(எ - று.) பெண்பிறந்தார்எவரும் தம்முடையபர்த்தாவைத்தவிர வேறு புருஷரை விரும்புபவரே;ஆயினும், அவர்கள்விரும்பியபடிசேருமாறு ஆடவர்கிடைப்பதில்லாமையால்தான் பலரும் ஒருபுருஷரையே கணவராகக்கொண்டுள்ளார்:தாம் மணந்துகொண்ட ஒருபுருஷரையன்றி வேறுபுருஷரைக்காமியாரென்பதில்லையென்ற இந்தப் பொதுப்பொருள் முன்னிரண்டடிகளிற்கூறிய சிறப்புப்பொருளைச்சமர்த்தித்து நின்றது:இது- வேற்றுப்பொருள்வைப்பணி. மகாவீரர்களான ஐவர் கணவராக அமைந்திருக்கையில், ஆறாம்புருஷரையும்காமிக்கின்றேனென்று கூறும் திரௌபதியை அருந்ததியனையாளென்றதுஎவ்வாறுபொருந்துமெனின்,- அக்ருத்யத்தை [தீவினையை]ச்செய்தா |