பக்கம் எண் :

412பாரதம்ஆரணிய பருவம்

23.-ஸ்ரீக்ருஷ்ணன்துவாரகாபுரி சேர்தல்.

முளைத்தெழுகமலத்தரும்பெனவரும்புமுகிழ்முலைப்பொதுவியர்
                                        மலர்க்கை,
வளைத்தழும்பகலாமரகதமலைபோல்வடிவழகுடைய
                                    வெம்மாயோன்,
உளைத்தெழுதரங்கப்பாற்கடன்மறந்தேயுறையும்வண்டுவரையை
                                          நோக்கி,
இளைத்தவரின்னலொழித்துமீண்டகன்றானிவருமீண்டிறைஞ்
                                   சியாங்கிருந்தார்.

     (இ - ள்.) முளைத்துஎழு - அரும்பித்தோன்றுகின்ற, கமலத்து
அரும்பு என - தாமரையரும்புபோல, அரும்பும் - தோன்றுகின்ற, முகிழ்
முலை- குவிந்த முலையையுடைய,பொதுவியர்-இடைச்சிமாரின், மலர் கை
- தாமரைமலர்போன்ற கைகளிலணிந்த, வளை- வளையினுடைய,தழும்பு-
அடையாளம், அகலா - (தனது திருமேனியில்) நீங்கப்பெறாதிருக்கப்பெற்ற,
மரகதம் மலைப்போல்வடிவு அழகுஉடைய-, எம் மாயோன் - எமது
க்ருஷ்ணன்,-இளைத்தவர்-(முனிவர்சாபம்நேருமே என்று) சோர்ந்தவரான
பாண்டவர்களின், இன்னல் - துன்பத்தை, ஒழித்து - போக்கி,-உளைத்துஎழு
தரங்கம் - ஆரவாரஞ்செய்து கொண்டு ஓங்கிவருகின்ற அலைகளையுடைய,
பாற்கடல் - திருப்பாற்கடலை,மறந்துஏ - மறந்துவிட்டே, உறையும்-(தான்)
வசிக்கிற, வள் துவரையை-வளப்பமுள்ள துவாரகாபுரியை, நோக்கி-, மீண்டு
அகன்றான்-:இவர்உம்-இந்தப்பாண்டவர்களும், (அந்த ஸ்ரீக்ருஷ்ணன்
மீண்டுசெல்லும்போது), மீண்டு இறைஞ்சி-அப்பெருமானைமறுபடியும்
வணங்கி, ஆங்கு-(தாம் இருந்த) அந்த இடத்தில்தானே, இருந்தார்-;(எ-று.)

     ஸ்ரீக்ருஷ்ணனைஆய்ச்சியர் இறுகத் தழுவுவதனால்அவர்களின்
வளைத்தழும்புஅப்பிரானது திருமேனியில் நீங்காதிருக்கு மென்க.
பாற்கடன் மறவாதுறையுமென்று பிரதிபேதம்.

    கன்னடபாரதத்திற் கூறியசருக்கத்துச் சரித்திரச்சுருக்கம் வருமாறு:-
பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருகால் வீமசேனன் வேட்டைக்குச்
சென்றானாக,காட்டினிடையே பெரிய நாவன்மரமொன்றில்
யானையினுடலையொத்தபழமொன்றைக்கண்டு வியப்புற்று அதனைப்
பறித்துவந்து தருமபுத்திரனது திருவடிவாரத்தில் வைத்தனன்.  அது கண்ட
தருமன் முதலியோர் வியப்புற்றனர்.  தருமன் அதனைக்குறித்து
முக்காலமுணர்ந்த சகதேவனைவினவினான். சகதேவன் 'அரசே!
கண்ணுவமுனிவரின் ஆச்சிரமத்திலிருக்கும் இந்த நாவன்மரத்தின்கனி
யாண்டுக்கு ஒருமுறை இவ்வகைக் கனி ஒன்றையே தோற்றுவிக்கும்.
யோகுபுரியும் கண்ணுவமுனிவர் யாண்டுக்குஒருமுறை யோகத்தின்நீங்கி
இந்தமரத்தினடியையணுகிக் கையைநீட்டின், இக்கனி அவர்கையைச்சேரும்:
இதையுண்டுவிட்டு அம்முனிவர் மீண்டும் யோகத்திலமர்வர்.  ஆகவே,
இப்போது அக்கண்ணுவமுனிவரால் பெருந்தீங்கு நேரக்கூடும் என்றான்.
அதுகேட்டதும் சிந்தையில் மூழ்கிய தருமன் ஸ்ரீக்ருஷணபகவானைத்
தியானிக்க, அப்பரமன் அங்கு வந்தனர்.  தருமன் தமக்குநேரஇருக்கும்
பெருந்தீங்கை அப்பெருமானிடம் விண்ணப்பித்தான்.  அந்தக்ருஷ்ண