பகவான்பாண்டவர்கட்கு அபயமளித்து 'உமதுமனத்திருக்கும் கொள்கைகளைஒளியாது கூறுவீராயின் இக்கனி தான் தோன்றிய மரத்திற் சேர்ந்திடும்'என்றார். அப்போது வீமசேனன் அக்கனியை அந்தநாவன்மரத்தின்கீழ்க் கொண்டுவைத்தான். பாண்டவர் ஒவ்வொருவர்கொள்கைக்கு ஒவ்வொருமுழமாக மேலேழுந்தது. ஆறாமவளானதிரௌபதியோ தன்கொள்கையை உள்ளபடி கூறாமற்போகவே,பழம் மேலெழுவது இல்லாததாயிற்று. ஸ்ரீக்ருஷ்ணன் திரௌபதியைநோக்கி 'உன்கொள்கையைஒளியாது கூறுவாய்'என்று வற்புறுத்த, அவளும் தன்கொள்கையை யுள்ளபடி தெரிவிக்க, அந்த நாவற்கனி தான் இருந்தஇடத்துச்சென்று ஒட்டிக்கொண்டது. அப்போது யோகத்தினின்று எழுந்த கண்ணுவர் பாண்டவரைவரையும் க்ருஷ்ணனையும் கண்டு வாழ்த்தி அக்கனியை ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அர்ப்பணம்செய்தனர்: ஸ்ரீக்ருஷ்ணன் அக்கனியை யாவர்க்கும் பகிர்ந்து கொடுக்கப் பின் யாவரும் தத்தமிடம் சேர்ந்தனர். கண்ணுவமகரிஷியும் யோகாப்பியாசத்துக்குச் சென்றன ரென்பது. (654) பழம்பொருந்துசருக்கம் முற்றிற்று. ----- எட்டாவது நச்சுப்பொய்கைச்சருக்கம் நஞ்சையுடையபொய்கைநீரை (ப் பாண்டவர் பருகி இறந்து மீண்டு உயிர்பெற்றெழுந்ததை)ப் பற்றிக் கூறும் நூற்கூறுபாடு என்றுபொருள். நஞ்சு+பொய்கை=நச்சுப்பொய்கை:வேற்றுமைப் புணர்ச்சி; இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனும் உடன்றொக்கதொகை: "மென்றொடர்மொழியுள்சில வேற்றுமையில், தம்மினவன் றொடராகாமன்னே" என்பதனால், மென்றொடர்க்குற்றியலுகரம்வேற்றுமையில் வன்றொடர்க் குற்றியலுகரமாயிற்று. பொய்கைச்சருக்கம் என்பதும் இரண்டனுருபும் பயனும் உடன்றொக்கதொகையே:இனி, பொய்கையினுடைய சருக்கம்என்று விரித்தால், ஆறாம் வேற்றுமைத்தொகையாம். சருக்கம்-ஸர்க்கம்என்ற வடசொல்லின் திரிபு: முடிபு அல்லது படைப்பு என்றுபொருள்:அது-சங்கேதத்தால், ஒரு பெரிய வகுப்பினுட்பட்ட சிறியபாகத்தைக் குறிக்கும். இந்தச்சருக்கம்-பாண்டவர் விண்டுசித்தமுனிவனது தபோவனத்தில் வசிக்கையில், துரியோதனனுடைய சூழ்ச்சியால் அபிசாரயாகஞ்செய்த காளமாமுனிவனது வேள்வித்தீயினின்றும் தோன்றிய பூதமொன்றுபாண்டவர்பால் ஏவியனுப்பப்பட்டது: அக்காலத்திற்குள் ஒருமான் பிராமணச்சிறுவனது கிருஷ்ணாசினத்தைக்கவர அதனைமீட்டுத்தருமாறு அந்தணச்சிறுவனால் குறைவேண்டிய பாண்டவர் மானைத்தொடர்ந்து வெகுதூரஞ்சென்று அதனைப்பிடிக்கமுடியாமலே களைப்படைந்தனர். அப்பால் தண்ணீர்வேட்கைவிஞ்சிய தருமபுத்திரனேவலால் சகதேவன்முதலிய நால்வரும்முறையே |