(அந்தப்)பாண்டவர்களைக்கொன்றுவிடுவோம்',என்று-,துணிந்தார்-;(எ-று.)- மற்று - அசை. அடைதருகாலைஎன்று பிரதிபேதம். (657) 4.-துரியோதனன்காளமாமுனியை வேறொருமுனிவனால் வரவழைத்தல். காளமாமுனிதனைக்கொடுவருகெனக்கலந்தநீற்றொளிகூரும் தூளமாமுனியொருவனோடறிவிலாச்சுயோதனனுரைசெய்ய வாளமாநிலமுழுதுடை மன்னனில் வந்தனன்விரைவிற்போய் மீளமாமறைவேள்விகூர் முனியொடும் விடுத்தமாமுனியம்மா. |
(இ-ள்.) அறிவுஇலா-நல்லறிவைப்பெற்றிராத,சுயோதனன்-, 'காளாமாமுனிதனைகொடு வருக-காளமாமுனிவனையழைத்துவருவாயாக' என-என்றுசொல்லி,கலந்த-உடம்பிற்பொருந்திய, நீறு-திருநீற்றின், ஒளி- கூரும்-மிகுதற்குக் காரணமான,தூளம்-நீரிற்குழையாமல் உடம்பிலேயணிதலையுடைய,மா முனி ஒருவனோடு-சிறந்தஒரு முனிவனுடனே,உரைசெய்ய-சொல்ல,-விடுத்தமாமுனி-அனுப்பப்பட்ட அந்தச்சிறந்த முனிவன்,-விரைவில்போய்-,-வாளம் மா நிலம் முழுதுடை மன்னன் - வட்டவடிவமாகியபெரிய பூமி முழுவதையும் தனதாகவுடைய மன்னவனானஅந்தத்துரியோதனனுடைய, இல்-மனையிலே,மா மறை வேள்வி கூர் முனியொடுஉம்-பெருமைபொருந்திய வேதத்திற் கூறப்படும் யாகத்தைப் புரிவதில் மிக்கவனானகாள மாமுனிவனுடனே, மீள வந்தனன்-; (எ-று.)-அம்மா-ஈற்றசை. தூளம் -உத்தூளனம்:விபூதியை நீரிற்குழையாமல் வரியாக வன்றி உடம்பிலே யணிதல். தூளமாமுனி என்றே பெயருமாம். (658) 5.-காளமாமுனிபாதங்களில் துரியோதனன் விழுந்து தன்னையீடேற்ற வேண்டுதல். ஒருமுனிக்கணங்களுக்குமுன் செய்கலாவுயர்வுடையுபசாரம் பெருமுனிக்களித்திறைஞ்சிநீபுரிதவப்பெருமையால்வளர்கின்றது இருநிலப்பரப்பெங்குமென் னாணையேயென்னைநீயீடேற்றத் திருவுளத்தருள்செய்குக வெனவவன் சேவடிகளில்வீழ்ந்தான். | (இ-ள்.) ஒருமுனிக் கணங்களுக்குஉம்-முனிக்குலங்களில் ஒருத்தர்க்கும், முன் செய்கலா-முன்செய்திராத, உயர்வு உடை- மேன்மையையுடைய, உபசாரம்-உபசாரத்தை, பெரு முனிக்கு-பெருமை பெற்ற அந்தக்காளமாமுனிவனுக்கு, அளித்து - அன்போடுசெய்து, இறைஞ்சி - வணங்கி,'நீ-,புரி-செய்த,தவம்பெருமையால்-தவத்தின் பெருமையால், இரு நிலம் பரப்புஎங்குஉம் - பெரிய பூமியின்பரப்பு முழுவதும், என் ஆணைஏவளர்கின்றது - என்னுடைய கட்டளையே மேன்மையுறச் செல்கின்றது;நீ-, என்னை-,ஈடுஏற்ற - (வரவிருக்கின்ற ஆபத்தினின்று) கரையேற்றும்படி, திருவுளத்து - (உமது) மேன்மை பொருந்திய மனத்திலே, அருள் செய்குக - கருணைபுரிவீராக,'என-, அவன்-அந்தக்காள மாமுனிவனுடைய, சேஅடிகளில்-செம்மையான பாதங்களில், வீழ்ந்தான்-;(எ-று.) |