தவப்பெருமையையுடைய உம்முடைய திருவருளால்தான் நான் உலகமுழுவதும் என்னாணையைச்செலுத்துகிறேனென்றுஉபசார வார்த்தையாகக்கூறுவான் 'நீபுரிதவப்பெருமையால்வளர்கின்றது இருநிலப் பரப்பெங்கும் என்னாணையே'என்றான். ஒரு முனிக்குலங்களுக்கும் என்றும் பாடம். (659) 6.-தன்னைஅழைத்த காரணத்தைக் காளமாமுனிவன் வினாவ,சகுனி 'பகைகளைக'என்றல். நன்கலாவிதமனைத்தையுந்தெரிக்குநன்னாவுடைமுனியென்னை என்கொலாமிவணழைத்ததின்றெனவவனிருந்தமாமனைநோக்கத் தன்கலாமனந்தோன்றவச் சகுனியத்தவமுனிவனைப்போற்றி மின்குலாவருவேணியாய்நீயிவன் வெம்பகைகளைகென்றான். |
(இ-ள்.)நல்-சிறந்த, கலா விதம் அனைத்தையும்- சாஸ்திரங் களின்வகைகளையெல்லாம்,தெரிக்கும்-உரைக்கவல்ல,நல் நா உடை-சிறந்த நாவினையுடைய,முனி-காளமாமுனிவன், 'என்னை-,இன்று - இன்றைக்கு, இவண் - இவ்விடத்தில், அழைத்தது-, என்-என்னகாரணம் பற்றியோ? என - என்றுவினாவ,அவன் - அந்தத் துரியோதனன், இருந்த-அங்கிருந்த, மாமனைநோக்க - சகுனியைப் பார்க்க,-அச்சகுனி-,-தன் - தன்னுடைய , கல் ஆம் மனம் தோன்ற - கல்லைப்போன்ற (வன்மையுடைய) நெஞ்சத்தின் தன்மை (பிறர்க்குப்) புலனாகும்படி,அ தவம் முனிவனை போற்றி - அந்தத் தவத்தையுடைய காளாமாமுனிவனைப்பாராட்டி, 'மின் குலாவரு வேணியாய் - மின்னல்போல் விளங்குகின்ற ஜடையையுடையமுனிவனே! நீ-, இவன் - இந்தத் துரியோதனனுடைய, வெம் பகை-கொடிய பகைவரை, களைக-போக்குவாயாக,என்றான்-என்று கூறினான்;(எ - று.) முதலடியில்கலா-ஆவீறு ஐயாகாத வடசொல். என்கொலாம், கொல் ஆம்-அசைகள். கலா-கல்லாத, படியாத [மூடத்தன்மையையுடைய],மனம் என்றுமாம். அவணிருந்த மாமனைஎன்றும்பாடம். (660) 7.-கன்னன் 'பாண்டவரைக்கொல்லஅபிசாரயாகஞ் செய்க'எனல். கொடுத்துமாநிலத்தின்னிசைவளர்க்குமக் கொடியபாவியுமைவர் விடுத்தபாரினம்வேண்டுவரிருக்கினவ்வேந்தரைவிண்ணேற்றற்கு அடுத்தவோமம்வஞ்சகங்களா லியற்றுதியாயினிவ்வெழுபாரும் கொடுத்திநீநிலைபெறவரவெழுதியகொடியவன்றனக்கென்றான். |
(இ - ள்) மாநிலத்து - இந்தப்பூமியிலே, கொடுத்து - தானஞ் செய்து, இன் இசை வளர்க்கும் - இனியபுகழை மிகுதியாக அடைகின்ற,அ கொடியபாவிஉம்-அந்தக்கடுந்தீவினையினனானகர்ணனும், 'ஐவர்- பஞ்சபாண்டவர், இருக்கின் - (உயிரோடு) இருப்போராயின், விடுத்த- (சூதுபோரிலிழந்து) விட்டிட்ட, பார்-பூமியை, இனம்-இன்னும், வேண்டுவர்- (தமக்கு) வேணுமென்று கேட்பார்கள்;அ வேந் |