தரை-அந்தப்பாண்டவராசரை, விண் ஏற்றற்கு-வானுலகில் ஏறச் செய்வதற்கு[கொல்லுதற்கு],அடுத்த - ஏற்ற, ஓமம்-யாகத்தை, வஞ்சகங்களால்-பகைவர் அறியாதவகைகளால், இயற்றுதி ஆயின்- செய்வாயானால்,அரவு எழுதிய கொடியவன்தனக்கு - பாம்பின்வடிவம் எழுதப்பெற்ற கொடியையுடையவனானதுரியோதனனுக்கு, இ எழு பார்உம்- ஏழுதீவுகளான இந்தப் பூமிமுழுவதையும், நீ-, நிலைபெற கொடுத்தி- நிலையாகக்கொடுத்தவனாவாய்',என்றான்- என்று கூறினான்;(எ - று.) கொடுக்குங்குணத்தால் இசைபெற்றோனாயினும்,(பாண்டவர் திறத்து) மனத்திலே தீவினையேயெண்ணுபவ னென்பார். 'கொடுத்தின்னிசை வளர்க்குங் கொடிய பாவி'என்றார். பிறருக்குத் தெரியாமல் அபிசாரவோமஞ்செய்யவேணு மென்பான், 'ஓமம்வஞ்சகங்களாலியற்றுதி' என்றான். கொடியவன்-கொடுமையையுடையவனென்ற பொருளும் தொனிக்கும். (661) 8.-கன்னனுடையவாசகம் கேட்டதும், முனிவன் நடுநடுங்கி, தன்நல்வினைகளெல்லாம்முடிந்தனவாமென்று கருதுதல். கன்னன்வாசகங்கேட்டபோ திரண்டுதன்கன்னமுநெருப்புற்றது, என்னவேவவைம்புலன்களும்நெஞ்சமுமிடியின்வாயரவொத்தான், பின்னையாதவனுரைப்பதுதவங்களும்பெருந்தகைமையும்பொன்றி, முன்னரேழெழுபிறப்பினல் வினைகளுமுடிந்தவின்றெனமுன்னி. |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ - ள்.)கன்னன் வாசகம் கேட்ட போது - கர்ணனுடைய வார்த்தையைக் கேட்டசமயத்தில், தன் இரண்டு கன்னம்உம் - தன்னுடைய இரண்டு காதுகளும்,நெருப்புஉற்றது என்ன-நெருப்புப்பட்டதையொப்ப, வேவ - வேகாநிற்க,-ஐம்புலன்கள்உம் - (தன்) பஞ்சேந்திரியங்களும், நெஞ்சம்உம்- மனமும், இடியின்வாய் அரவு - இடி யரவங்கேட்ட பாம்பை, ஒத்தான் - ஒப்பநடுங்கப்பெற்றான்:பின்னை- (மேலே சொல்லப்போவது தவிர) வேறாக,யாதுஅவன் உரைப்பது-அம்முனிவன் என்ன சொல்லமுடியும்? 'தவங்கள்உம்- (நான் இது வரையிலும் செய்த தவங்களும், பெரு தகைமைஉம்-(என்னடைய) பெருமைக்குணமும், பொன்றி-அழிந்து, (அம்மாத்திரத்தோடு நில்லாமல்), முன்னர் - முன்பு நேர்ந்த, ஏழ் ஏழுபிறப்பின் - எழுவகையாகவுள்ள ஏழு பிறவிகளிற்செய்துள்ள, நல் வினைகள்உம்- (என்னுடைய) புண்ணியச்செயல்களும், இன்று - இன்றோடு, முடிந்த - ஒழிந்துவிட்டன,'என முன்னி - என்றுநினைத்து,-(எ-று.)- 'என்றான்'(10) என்க. சொன்னதைக்கேட்டவை முதன்முதலிற் காதுகளே யாதலால் அவைபட்ட கடும்பாட்டை முதலிற் கூறி, பிறகு காதுகளுட்பட்ட பஞ்சேந்திரியங்களும் அவைகட்கு ஞானம் வரும் வாயிலான நெஞ்சமும் வருந்தியமையைக் கூறுகின்றார். புலன்-பொறிக்கு இலக் |