பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்419

கணை. இடியைக்கேட்ட அரவம் நடுங்குமென்பது, நூற்கொள்கை. இப்போது
இந்தத்துரியோதனாதியரின்தூண்டுதலால், தான் செய்யப்போகின்ற
தீவினையால், இந்தப்பிறவியின் நன்மையேயன்றி ஏழேழ் பிறவியின் நன்மையும்
கெடுமென்று கருதினான்முனிவ னென்க.                       (662)

9.-இரண்டுகவிகள் -நீ கூறியவாறு அபிசாரவோமஞ்
செய்தால்எனக்குஅன்றிப் பாண்டவர்க்கு அழிவு
நேராதென்று முனிவன்கூறல்.

எண்வகைப்பெருந்திசையினும்நினதுபேரிசையிலாத்திசையில்லை
மண்ணனைத்துநின்றனிக்குடைநிழலிலேமனுமுறைமையின்வாழும்
கண்ணலுற்றதிக்கருமநீ யெக்குறைகண்டுவெங்கழற்காலாய்
விண்ணகத்துநானேற்றுதல் புரியினும்வீவரோவீவில்லார்.

     (இ-ள்.) எண்வகை பெருந் திசையின்உம்-எட்டுவகைப்பட்ட
பெருந்திக்குக்களிலும், நினது - உன்னுடைய, பேர் இசை இலா-
மிக்ககீர்த்தியையுடையதாகாத, திசை-திக்கானது, இல்லை-;மண்
அனைத்துஉம்-பூமிமுழுவதும்,நின்-உன்னுடைய, தனி குடை நிழலிலே -
ஒப்பற்ற குடைநிழலின்கீழே (தங்கி), மனு முறைமையின் - மனுநூலிற்கூறிய
முறைவழுவாமல், வாழும் - வாழ்ச்சியடையாநின்றுள்ளது:எ குறைகண்டு-
எந்தக்குறையைக் காண்பதனால்,இ கருமம்-(பகைவரை
அபிசாரத்தாலொழித்தலாகிய) இந்த(த்தீ)ச்செயலை,நீ-, கண்ணல்உற்றது-
எண்ணுதற்குப்பொருந்தியது? வெம் கழல் காலாய் - விரும்பத்தக்க
கழலையணிந்தபாதங்களையுடையவனே!நான்-, (பாண்டவர்களை),விண்
அகத்து-சுவர்க்கலோகத்திலே, ஏற்றுதல் புரியின்உம் -
ஏற்றுதற்குரியதொழிலைச்செய்தேனானாலும்,வீவு இல்லார் -
அழிதற்குரியஊழ்இல்லாதவராகிய அந்தப் பாண்டவர், வீவர்ஓ-
இறப்பார்களோ? [இறக்கமாட்டார்கள்என்றபடி];(எ-று.)

    எண்வகைப்பெருந்திசை-கிழக்குமுதலியநான்குபிரதான திக்குக்களும்,
தென்கிழக்குமுதலிய நான்குமூலைத்திக்குக்களும், அங்கதேசத்துக்கு
அதிபதியான கர்ணனை'மண்ணனைத்தும்நின் தனிக்குடை
நிழலிலேவாழும்'என்றது-இவனதுவலிமையையே சிறப்புறக்கொண்டு
துரியோதனன் நிலவுலகாட்சிபுரிவதனாலாகும்.  பாண்டவர்கள்
உயிரோடிருத்தலால் யாதொருகுறையுமில்லாது நீங்கள் இனிதிருக்க,
அவர்களையொழிக்கவேண்டுமென்று கருதுதற்குக் காரணமில்லையே
யென்பது, மூன்றாம்அடியின்கருத்து.                    (663)

10.தொடங்கியான்புரிதீவினையென்னையேசுடுவதல்லதுகொற்றம்,
மடங்கல் போல்பவர்தங்கண் மேற்செல்லுமோமாயவனிருக்
                                      கின்றான்,
இடங்கொள்பாரகம் பெறுவதற் கெண்ணுநின்னிச்சையின்
                                      படி யேகி,
விடங்களாலுயிரொழிப்பவர்க் கொத்துநான்வீவதேமெய்
                                      யென்றான்.