பக்கம் எண் :

420பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) (உமதுசொற்கேட்டு), யான்-, தொடங்கி-ஆரம்பித்து'புரி -
செய்கின்ற, தீவினை- தீச்செயல், (அதன்பயனால்),என்னைஏ சுடுவது
அல்லது - என்னையேஎரித்தொழிப்பதல்லாமல், கொற்றம் மடங்கல்
போல்பவர் தங்கள்மேல் - வெற்றிபொருந்தியசிங்கத்தை யொப்பவர்களாகிய
பாண்டவர்கள் மீது,செல்லும்ஓ-(பயனைவிளைக்குமாறு)செல்லவல்லதோ?
[செல்லவல்லதன்று];(ஏனெனில்), மாயவன் இருக்கின்றான்-(தீவினைப்பயன்
அந்தப்பாண்டவர்கட்கு நிகழாத வாறுபாதுகாக்க) ஸ்ரீக்ருஷ்ணன்
இருக்கின்றான்:இடம் கொள் பார் அகம் பெறுவதற்கு - விசாலமாகவுள்ள
பூமியினிடத்தை (ப்பாண்டவர்கட்குக்கொடாமல் நமக்கேஉரியதாக)
ப்பெறும்படி, எண்ணும்-ஆலோசிக்கின்ற, நின்-உன்னுடைய, இச்சையின்படி-
விருப்பத்தின்படி, ஏகி-(நான்) சென்று, விடங்களால்-, உயிர் ஒழிப்பவர்க்கு
ஒத்து-(தம்) உயிரை மாய்த்துக்கொள்பவரைப்போன்று, நான்-, வீவது ஏ-
சாவதே, மெய் - உண்மையாய் நிகழும் செயலாகும், என்றான்-;

    உன்சொற்கேட்டுப் பாண்டவர்களைஅபிசாரயாகம் செய்து
கொல்லமுயன்றேனேயானால்ஸ்ரீக்ருஷ்ணபகவான் தீவினைப்பயனை
நணுகவொட்டாது செய்தற்குப்பாண்டவர்பக்கல்உள்ளதனால்"தன்வினை
தன்னைச்சுடும்"என்றவாறு அத்தீவினைப்பயன்என்னையேசுட்டு
என்னுயிரை அழிப்பது திண்ண மென்று காளமாமுனிவன் பதில்கூறினா
னென்பதாம்.  உயிரொழிபவரொத்து என்ற பாடம் ஏற்கும்.     (664)

11.-யாவரும்பணிந்துவேண்டி முனிவனைஅபிசாரவோமம்
செய்யஇசையுமாறுசெய்தல்.

அசைவிலாமனத்தருந்தவ முனிவனையனைவரும்பணிந்தேத்தி,
இசையுமாறுசெய்தோமவான்பொருள்களுக்கியாவும்வேண்டுவ
                                          நல்கத்,
திசையெலாமுகமுடையவ னிகர்தவச்செல்வனுஞ்சென்றான்
                                          வெவ்,
வசையினான்மிகுகொடியகோலரசனுமகிழ்ந்துதன்மனை
                                        புக்கான்.

     (இ - ள்.) அசைவு இலா மனத்து - சலித்தலில்லாத மனத்தை
யும்,அருந் தவம்-(பிறக்குக்குச்செய்தற்கு) அரிய தவத்தையுமுடைய,
முனிவனை- காளமாமுனிவனை,அனைவர்உம்- (துரியோதனன் கர்ணன்
சகுனி துச்சாதனன் என்ற) நால்வரும், பணிந்து - வணங்கி, ஏத்தி -
புகழ்ந்து, இசையும் ஆறு செய்து-(அபிசாரவேள்வியையியற்றுவதற்கு)
உடன்படும்படி செய்து, ஓமத்துக்கு வேண்டுவ வான் பொருள்கள் யாஉம்
நல்க-வேள்விக்கு வேண்டுவனவாகிய சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும்
தர,-திசை எலாம் முகம்உடையவன் நிகர் தவம் செல்வன்உம் -
நான்குதிக்கையும் நோக்கிய நான்குமுகங் களையுடையவனான
பிரமதேவனையொத்தஅந்தத் தபோதனனும், சென்றான்- (அபிசாரவேள்வியைச்
செய்யும்படி)போனான்:வெவ்வசையினால்மிகு - (உலகத்தாரின்) கொடிய
பழிப்பினால்மிகப்பெற்ற, கொடியகோல் அரசன்உம் -
கொடுங்கோலரசனானதுரியோதனனும்,