பரந்துள்ளஆகாயத்தின் பழமையாகிய மைந்தனைப்போல [காற்றைப்போல], விசைத்து ஓடிற்று - விரைவுகொண்டு ஓடிற்று:என்னால் சொல உண்டுஓ - (இவ்வாறுநிகழ்ந்த விசித்திரத்தன்மை பற்றி) என்னாற் சொல்லுதற்கு உள்ளதோ? [சொல்லமுடியாதென்றபடி];(எ - று.) பாண்டவர்கள்வில்லேந்தினவர்களா யிருக்கையிலும், ஒரு மானானது அஞ்சாது விரைந்துஉட்புகுந்து முனிகுமாரன் பூண்டிருந்த மான்தோலைக்கவர்ந்துகொண்டுகண்ணுக்குத் தெரியாது மாயமாய் ஓடிற்று என்றால்,அந்தவிசித்திரத்தன்மையை யான் என்னவென்று சொல்லுவது? என்றவாறு. ஆகாசத்தின்னின்றும் வாயு தோன்றியதாக வேதங்களில் கூறப்படுவதனால், காற்றை, 'வான்தொல்மைந்தன்'என்றார். 'வான் றொன்மைந்தனைப்போல்ஓடிற்று' என்றவிடத்தில், 'காற்றாய்ப்பறந்தது' என்று வழங்கும் உலகவழக்குக் கருதத்தக்கது. 'சொலவுண்டோ' என்றஇடத்துள்ள ஓகாரம் - சொல்லமுடியாதுஎன்று எதிர்மறைப்பொருளைத் தரும். சரியாநின்ற-நிகழ்காலப் பெயரெச்சம். பூணசினம்-வினைத்தொகை. மைந்தர்-இளமை, வலிமை, வீரம், அழகு என்ற இவற்றை யுடையவர். தபோவநம், முநி, அஜிநம் - வடசொற்கள். மைந்தரையும், உம்மை - உயர்வுசிறப்பு. 18.-முனிகுமாரன்முறையிட, பாண்டவர்கள் மானைத் தொடர்ந்துசெல்லுதல். மறைவாய்ச்சிறுவன்கலைத்தோலைமான்கொண்டோடி வானிடை யில், பொறைவாய்ப்புகுந்ததபயமெனப் புகுந்தாங்கழுதுபுலம்புதலும், நறைவாய்த்தொடையலறன்மகனு மிளையவீரர்நால்வருந்தம், துறைவாய்ச்சிலையோடம்பேந்தித்தொடர்ந்தாரதனைச்சூழ் புலிபோல். |
(இ-ள்.) மறைவாய் சிறுவன்-வேதத்தை வாயினாற்கூறிக் கொண்டிருப்பவனாகியமுனிகுமாரன், ஆங்கு புகுந்து-(பாண்டவ ரிருக்கின்ற) அவ்விடத்தில்வந்து, 'கலைதோலை-(நான்பூணூலுடன் பூண்டிருந்த) மான்தோலை,மான்-ஒருமானானது,கொண்டு-கவர்ந்து கொண்டு, ஓடி- விரைந்துசென்று, வானிடையில்-நெடுந்தூரத்தில், பொறைவாய்- மலையினிடத்தில்,புகுந்தது - ஒளித்துக்கொண்டது:(ஆதலால்), அபயம் - (யான்) பயப்படாதே என்று காக்கவேண்டியபொருளாவேன்,'என - என்றுசொல்லி, அழுது புலம்புதலும்-கண்ணீரைப்பெருகவிட்டுக் கதறிமுறையிட்டவளவில், - நறைவாய்-தேனைத்தன்னிடத்திலுடைய, தொடையல்-மாலையையணிந்த,அறன் மகன்உம் - தருமனுடையபுத்திரனாகியயுதிஷ்டரனும், இளையவீரர் நால்வர்உம்- (அவனது) தம்பிமார்களாகிய நான்குவீரர்களும், தம்-தம்முடைய, துறை வாய் சிலையோடு-விற்கூறுபாட்டிற்பொருந்துதலையுடையவிற்களுடனே, அம்பு - அம்புகளையும்,ஏந்தி-தாங்கிக்கொண்டு, அதனை- அம்மானை,சூழ் - சூழ்ந்து கொள்ளுதற்குத்தொடர்கிற, புலி போல்-புலிகளைப்போல, தொடர்ந்தார்-தொடர்ந்தார்கள்;(எ-று.) |