பக்கம் எண் :

426பாரதம்ஆரணிய பருவம்

     சிறுவன்ஆங்குப்புகுந்துஅபயம் என அழுது புலம்புதலும், மகனும்
நால்வரும் சிலையோடுஅம்பேந்தி, புலிபோல் அதனைத்தொடர்ந்தார்
என்க.

     முனிகுமாரன்பிரமசாரி யாதலால், தனதுபிரமசரியநிலைக்குஏற்றபடி
வேதத்தை ஓதிக்கொண்டிருக்கின்றன னென்பார், அவனை'மறை
வாய்ச்சிறுவன்'என்றார். பொறை-(பூமியைப்) பொறுப்பது [சுமப்பது]என
மலைக்குக்காரணப்பெயர்:'ஐ'என்னும் கருத்தாப் பொருள்
விகுதிபெற்றபெயர்:'தரணீதரம்'முதலிய வடமொழிப் பெயர்களாலும் மலை
பூமியைத் தாங்குதலாதல் பெறப்படும்.  பொறைவாய், வாய்-ஏழனுருபு.
நறைவாய், வாய் - ஏழாம்வேற்றமை யிடப்பொருளுணர நின்ற இடைச்சொல்.
தொடையல் என்பதில், அல் - சாரியை.  தொடை-(பூக்களைக்கொண்டு)
தொடுக்கப்படுவது என மாலைக்குக்காரணப்பெயர்;தொடு-பகுதி, ஐ-
செயப்படுபொருள்விகுதி.  தீவினைசெய்தோர்களைநரகத்திலே தண்டித்துத்
தருமத்தை நிலைநிறத்துதலால்,யமதருமராஜனை'அறன்'என்றார்:அறன்-
அறத்தைக் காப்பவன்.  நால்வர்என்பதில், வ் - பெயரிடைநிலை. துறை-
விற்களைஉபயோகிக்கவேண்டிய வழி.  நான்காமடியில், வாய்-வாய்த்தல்:
முதனிலைத்தொழிற்பெயர்.  வாய்ச்சிலை- வாய்த்தலையுடையசிலைஎன
இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனும் உடன்தொக்கதொகை.  சூழ்புலி-
வினைத்தொகை.

19.-ஓடியமானின்செயலால் தளர்ந்து பாண்டவர்
அதைத் தொடர்தலில்ஆசையொழிதல்.

அகப்பட்டதுபோன்முன்னிற்கு மருகெய்தலுங்கூராசுகம்போல்,
மிகப்பட்டோடுந்தோன்றாமல்வெளிக்கேயொளிக்கும்
                                  விழியிணைக்கும்,
முகப்பட்டிடுமீண்டைவருந்தம் முரண்டோள்வன்மைதளர்
                                         வளவும்,
தகைப்பட்டொழிந்தாரதிலாசை யொழிந்தாரிந்த்ரசாலமெனா.

     (இ-ள்.) (தோலைக்கவர்ந்துகொண்டுசென்ற மான்),-
அகப்பட்டதுபோல்-(கையில்) அகப்பட்டுவிட்டதுபோல், (பாண்டவர்களின்
அருகிலே), முன் நிற்கும்-முன்னே வந்துநிற்கும்:(அந்தப் பாண்டவர்கள்),
அருகு-(தன்) சமீபத்தில், எய்தலும்-வந்து சேர்ந்தவுடனே, கூர் ஆசுகம்
போல்-கூரிய அம்புபோல, மிக பட்டு ஓடும்-மிகப்பொருந்தியோடும்:
தோன்றாமல்-(கண்ணுக்குத்)தெரியாமல், வெளிக்கே-வெளியில், ஒளிக்கும்-
(தன்னை)ஒளித்துக்கொள்ளும்;மீண்டு-மறுபடியும், விழி இணைக்கும்உம்-
இரண்டுகண்களுக்கும், முகம்-எதிரில், பட்டிடும்-பொருந்திநிற்கும்;
(இவ்வாறுஅந்தமானினால்),ஐவர்உம்-பஞ்சபாண்டவர்களும், தம் -
தம்முடைய, முரண்வலிமையையுடைய, தோள் - தோள்களின், வன்மை-
பலமானது, தளர்வுஅளவும்-தளர்தலையடையும்வரையிலும்,
தகைப்பட்டுஒழிந்தார்-(தொடர்ந்து பிடிக்கமுடியாமல்) தடுக்கப்பட்டுத்
தீர்ந்தார்கள்;(பிறகு தோள்வலிமைதளர்ந்ததனால்),இந்த்ரசாலம்எனா-
(இந்த மானின்செய்கை) இந்திரஜாலம்போலுமென நினைத்து,அதில்-அந்த
மானைத்தொடர்தலில்,ஆசை ஒழிந்தார்-ஆசைநீங்கினார்கள்;(எ-று.)