இந்த்ரஜாலம்- மாயச்செய்கை:வடசொல். ஆசுகம் - விரைந்து செல்லுவதுஎன அம்புக்குக் காரணப்பெயர். தகை - தகைதல்: முதனிலைத்தொழிற்பெயர். எனா- செய்யாஎன்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். (673) 20.-கவிக்கூற்று:மான்கன்று பாண்டவர்களைஇளைப்பித்த வகையை எம்மாற்கூறவியலாதெனல். தடங்கானகமும்வானகமுஞ் சாரற்பொருப்புந்தாழ்வரையும், மடங்காவரும்போஞ்சூழ்போது மப்போதந்தமான்கன்று, தொடங்காவிவரையிளைப்பித்ததொழிலைச்சொல்லினொரு நாவுக்கு, அடங்காதின்னுமாயிரமுண் டானாலதற்குமடங்காதே. |
(இ-ள்.) தடகானகம்உம்-பெரிய காடும், வானகம்உம்-ஆகாசமும், சாரல் பொருப்புஉம்-(மேகஞ்) சார்தலையுடையமலையும்,தாழ்வரையும்-,- (ஆகிய இவ்விடங்களில்), அப்போது-,அந்த மான் கன்று-, மடங்கா வரும்- திரும்பத்திரும்பவரும்:போம்-(சிறிதுநேரம் கண்ணுக்குத்தெரியாமல் அப்பாற்)போய்விடும்:சூழ்போதும்-சிலகால் வலமாகவும் சிலகால் இடமாகவும் சுற்றும்:தொடங்கா -(அம்மானைப்பற்றத்) தொடங்கியுள்ள, இவரை-, இளைப்பித்த- சோர்வு அடையுமாறுசெய்த, தொழிலை-, சொல்லின் - (நாம் எடுத்துச்)சொல்வோமேயானால்,ஒரு நாவுக்கு-இந்தஒரு நாவினாற்சொல்லிமுடித்தற்கு, அடங்காது-(அத்தொழில்)அடங்காததாகும்: இன்னும் ஆயிரம் உண்டானால்- இன்னும்ஆயிரம்நாக்கு உண்டானாலும், அதற்குஉம்-அந்த ஆயிரம்நாவுக்கும், அடங்காது-; அதற்கு-சாதியொருமை. மடங்காவரும் போம் சூழ்போதும் என்பவற்றைப்பெயரெச்சமெனக்கொண்டு மான்கன்றுக்குஅடை மொழியாக்கினுமாம். தொடங்கா என்ற வினையெச்சத்தின்பின் ஏற்றவினைச்சொல்வருவிக்கப்பட்டது. (674) 21.-யமதருமன்நச்சுக்சுனையாயும்அதைச்சூழ்ந்த மரமாயும்அமைந்திருத்தல். கானீதிவர்க்குத்தலைதெரியாக்கானங்கருத்துமிகக்கலங்கிப் பானீயத்துக்கைவருமெய் பதையாநிற்பரெனவறிந்து தூநீர்நச்சுச்சுனையாயச்சுனைசூழ்வரவோர்தொன்மரமாய் யானீயவனென்றெண்ணாமலெல்லாமானோனிருந்தானே. |
(இ - ள்.)யான் நீ அவன் என்று-யானென்றும் நீயென்றும் அவனென்றும், எண்ணாமல்- எண்ணமுடியாதபடி, எல்லாம் ஆனோன்- எல்லாப்பொருளுமாகியிருக்கிற யமதருமன், 'ஈதுகான்-இந்தக்காடானது, இவர்க்கு-இந்தப்பாண்டவர்க்கு, தலைதெரியா-இடந்தெரியாத, கானம் - காடாகும்;(இந்தக்காட்டில் அலைந்ததனால்),ஐவர்உம்- பஞ்சபாண்டவர்களும், கருத்து - (தம்) மனம், மிக கலங்கி - மிகவும் கலக்கமடைந்து, பானீயத்துக்கு-பருகும் நீரைப்பெறுவதற்காக, மெய் பதையா நிற்பர் - உடல்வருந்தாநிற் |