பார்கள்,'என அறிந்து-என்று ஆலோசித்து, தூ நீர்-(கண்ணுக்குத்) தூய்மையுடையதாகத்தோன்றுகின்ற நீரைக்கொண்ட, நஞ்சு சுனைஆய்- விஷத்தையுடைய சுனையாகவும்,அ சுனைசூழ்வர-அந்தச் சுனையைச்சுற்றிநிற்க,ஓர் தொல் மரம்ஆய் - ஒப்பற்ற பழமையான மரமாகவும், இருந்தான்-;(எ-று.) காட்டில்நெடுந்தூரம் மானைத்தேடி யலைந்துதிரிந்தமையால், பாண்டவரைவரும் களைத்துக்குளிர்ந்தநிழலையும்தண்ணீரையும் நாடிவருவரென்று ஆலோசித்து, யமதருமன் தொன்மரமும் சுனையுமாயிருந்தானென்க. தொன்மரமாய் என்பதற்கு-முதனூலுக்கு ஏற்ப, ஆலமரமாகியென்னலாம். சூரியன் யமன் வருணன் முதலிய கடவுளரை முதற்கடவுள்போல வைத்துக்கூறுதல் வேதவழக்காதலாலும், இந்நூலாசிரியரும் சிவன் சூரியன்முதலிய கடவுளரை அவ்வாறு கூறியிருத்தலாலும், இங்கே யமனை'யானீயவனென்றெண்ணாமல் எல்லாமானோன்'என்றார்: கீழ் "மும்மைப்புவனங்களுங்காக்கும் அறக்கடவுள்"என்றதும் இத்தன்மைபற்றியதேயென்னலாம். யான் நீ அவனென்றெண்ணாமல்எல்லாமானோன்-உலகத்துப்பொருள்கள் தன்மையாகவோ முன்னிலையாகவோபடர்க்கையாகவோ பேதப்படுத்தி வழங்குதற்கு உரியன;கடவுளோ அங்ஙனம் அன்றி எல்லாத்தன்மையும் பெற்றிருப்பன் என்றவாறு. பானீயம்-பருகுதற்குஉரியது என்று பொருள்படும் வடமொழிப்பெயர். 'எண்ணாமல்'என்ற எதிர்மறைவினையெச்சம்'ஆனோன்' என்பதிலுள்ள ஆதல்என்பதோடு முடியும். பதையா-பதைத்து: உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்.நஞ்சு+சுனை=நச்சுச்சனை: வேற்றுமைத்தொகையில் மென்றொடர்வன்றொடராயிற்று. (675) வேறு. 22.-தருமன்நீர்கொணருமாறு சகதேவனைஅனுப்புதல். தருமனுந்தம்பிமாருந் தாலுவும்புலர்ந்துதாகத்து உருகியமனத்தராகி யுடல்தளர்ந்தயருமாங்கண் எரியுறுகானம்போல்வா னிளவலைநோக்கியின்னே மருவரும்புனல்கொண்டோடி வருதிநீவிரைவினென்றான். |
(இ-ள்.)தருமன்உம்-யுதிஷ்டிர ராசனும், தம்பிமார்உம் - (வீமன் முதலிய அவனது) தம்பியரும், தாலுஉம் புலர்ந்து - (தமது) நாவும் வறண்டு, தாகத்து - நீர்வேட்கையினால்,உருகிய மனத்தர்ஆகி - (உறுதியற்று) நீர்ப்பண்டம்போலுருகின மனத்தையுடையவராய், உடல் தளர்ந்து - உடம்பு சோர்ந்து, அயரும்-வருந்துகின்ற, ஆங்கண் - அச்சமயத்தில்,-எரிஉறு கானம் போல்வான்-தீப்பிடித்த காடுபோல்பவனாகிய[மிகவும் வெப்பமடைந்தவனாகிய]தருமபுத்திரன்,-இளவலைநோக்கி-(தனது இறுதித்) தம்பியாகிய சகதேவனைப்பார்த்து, 'நீ-,இன்னே - இப்போதே, மருவு அரு-(இங்குக்) கிடைத்தற்கு அரிய, புனல்-நீரை, கொண்டு-எடுத்துக் |