24.-தருமபுத்திரன்சகதேவன்செய்தியை யுணராமல் நீர்கொணருமாறு நகுலனையும்அருச்சுனனையும் பின்னும் அனுப்புதல். செழும்புனலுதரந்தன்னிற் சேருமுனாவிபொன்றி விழுந்தமையறிவுறாதுமீளவுநகுலன்றன்னை அழுங்கினனேவச்சென்றானவனுமப்பரிசின்மாய்ந்தான் எழும்படைவிசயன்றன்னையேவினனவனும்போனானன். |
(இ-ள்.)செழும் புனல் - வளப்பமுள்ள நீர், உதரம்தன்னில்-(தன்) வயிற்றில், சேரும் முன் - சேருதற்குமுன்னே, (சகதேவன்),ஆவி பொன்றி - உயிர் ஒடுங்கி, விழுந்தமை - இறந்து வீழ்ந்திட்டதை, அறிவுறாது- அறியாமல்,-(தருமபுத்திரன்),-அழுங்கினன்-(நீர்வேட்கையால்) வருந்தியவனாய்,-நகுலன் தன்னை-நகுலனை,மீளஉம்-மீண்டும், ஏவ - (நீர்கொணருமாறு) கட்டளையிட்டானாக,-அவன்உம்-அந்தநகுலனும், சென்றான்-(நீர்கொணரச்)சென்று, அப்பரிசின் - அந்தவிதமாக [சகதேவன் நீர்வேட்கையால் சுனைநீரைப்பருகி இறந்தவிதமாகவே],மாய்ந்தான்- (நீர்பருகி) உயிரொழிந்தான்: எழும் படை விசயன்தன்னை- (பகைவர்மீது) செல்லவல்ல ஆயுதங்களையுடையஅருச்சுனனை,ஏவினன் - (பின்னும் தருமபுத்திரன் நீர் கொணருமாறு) கட்டளையிட்டனுப்பினான்;அவன்உம் - அந்தஅருச்சுனனும், போனான்-(நீர்தேடிக்கொணருமாறு) சென்றான்;(எ-று.) 'சகதேவன்அந்தச்சுனைநீரைப்பருகியதனால்ஆவியொழிந்தான்' என்ற செய்தியை, 'செழும்புனலுதரந்தன்னில் சேருமுனாவிபொன்றி விழுந்தமை'என அநுவாதமுகத்தாற் கூறினார்: இப்படி ஒருசெய்தியை ஏற்கவே கூறவேண்டியஇடத்திற் கூறாதுஅநுவாதமுகத்தாற் கூறுதலும் கவிமரபே. சென்றாங்கவனுமப்பரிசின்என்றுபிரதிபேதம். (678) 25.-அருச்சுனனும்நீர்பருகி இறந்தானாக,தம்பியர் நீர்கொண்டுவராமைகுறித்துத் தருமபுத்திரன் வருந்திச்சோர்தல். தம்பியர்கிடந்ததன்மை கண்டுமத்தலைவன்மேன்மேல் வெம்புறுகொடியதாக மிகுதியால்விரைந்துவாரிப் பைம்புனலருந்தியவ்வா றிறந்தனன்பரிதாபத்தோடு எம்பியரென்செய்தாரென் றியைவனுமினைந்துசோர்ந்தான். |
(இ-ள்.) அ தவைன்- அந்த அருச்சுனனாகியதலைவன்,தம்பியர் கிடந்த தன்மை-(தனது) தம்பிமார் (சுனைநீரைப்பருகி) மாய்ந்து கிடக்கின்ற தன்மையை, கண்டுஉம்-பார்த்தும், மேன்மேல் வெம்புறு கொடிய தாகம் மிகுதியால்-மேலும்மேலும் தவித்தற்குக்காரணமான கொடிய மிக்க தாகத்தினால்,பைம் புனல்-(சுனையின்)பசிய [குளிர்ந்தநீரை, விரைந்து வாரி - விரைவுகொண்டு (கையினால்)முகந்து அருந்தி - பருகி, அ ஆறு - (அந்தச் சகதேவன்முதலிய தம்பிய |