பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்431

இறந்த) அந்தவிதமாகவே, இறந்தனன்-உயிரொடுங்கினான்:இறைவன்உம்-
தலைவனாகியதருமபுத்திரனும், பரிதாபத்தோடு-மிக்கவருத்தத்தோடு,
'எம்பியர்-எனதுதம்பிமார், என் செய்தார் - என்ன (இப்படிச்)
செய்தார்கள்!'என்று - என்றுசொல்லி, இனைந்து- வருந்தி, சோர்ந்தான் -
தளர்ச்சியடைந்தான்;(எ-று.)

     சகதேவன்முதலிய தம்பிமார் சுனைநீரைப்பருகிஉயிரொடுங்கி
விழுந்திருத்தலைக்கண்டும், அருச்சுனன், தாகத்தைத் தாங்கமுடியாமையால்,
தானும் அந்தச்சுனைநீரைப்பருகிஇறந்துபட்டான்: இங்ஙனம்
புனல்கொணரச்சென்ற மூவரும், சுனையின்நச்சுநீரைப்பருகி இறந்துபட்ட
செய்தியை யுணராத தருமன் 'என்சொல்லைஒருசிறிதும்மீறாததம்பியர்
ஒருவரல்ல  இருவரல்ல மூவரும், எனது தாகத்தின்கடுமையை
நேரேகண்டிருந்தும், விரைந்து நீர்கொணராது தாமதிக்கின்றனரே!  இது
என்னே!!'என்று மிக்க பரிதாபத்தோடு வருந்திச்சோர்பவனானானென்க.
அருச்சுனன் வில்வித்தையில் மேம்பட்டுச்சிறத்தலால், அவனையும்
'தலைவன்'என்றார்: பாண்டவருள் தருமபுத்திரன் மூத்தவனாய்த்
தலைமைபெறுதலால்,அவனை'இறைவன்'என்றார்.           (679)

26.-வீமன்தருமபுத்திரனைத்தேற்றி நீர் கொணரச்
சென்று சுனையைக்கண்டுஅதன்நீரை நஞ்சுஎன்று அறிதல்.

வீமனங்கவனைத்தேற்றிமெலிவுசோகத்தோடும்
ஈமமொத்தெரியுங்கான மெங்கணுந்திரிந்தங்கெய்திச்
சாமுறைத்தம்பிமாரைக் கண்டருந்தடத்துநீரை
ஆமெனக்கருதாதால மாகுமென்றகத்திற்கொண்டான்.

     (இ-ள்.) அங்கு- அப்போது, வீமன் - வீமசேனன், அவனை-அந்தத்
தருமபுத்திரனை,தேற்றி - (தான் விரைவில் நீர்கொணர்வதாகச்சொல்லிச்)
சமாதானப்படுத்தி, (பயணப்பட்டு), ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கண்உம்
திரிந்து - சுடுகாட்டையொத்துப் பற்றியெரிகின்ற காடுஎங்கும் அலைந்து,
(இறுதியில்), அங்கு எய்தி-(சுனையுள்ள)அந்தஇடத்திற்குப் போய், சாம்
முறை தம்பிமாரை கண்டு-உயிர்நீங்கியநிலையையடைந்திருந்த(அருச்சுனன்
நகுலன் சகதேவன் என்ற) தம்பிமாரைப் பார்த்து, (அதனால்),மெலிவுறு
சோகத்தோடுஉம்-மனம்மெலிதற்குக்காரணமான துக்கத்துடனே, அரு தடத்து
நீரை ஆம் என கருதாது - அருமையாகக்கிடைத்த சுனையின்நீரை(நல்ல)
தண்ணீர்என்று கருதாமல், ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் -
விஷத்தையுடையதாகும்என்று மனத்தில் எண்ணினான்;(எ-று.)

     தம்பிமார்இறந்துகிடந்ததுகண்ட வீமசேனன், 'இவர்கள்நீர்
வேட்கையால் இச்சுனைநீரைப்பருகியிருக்கவேண்டும்: அங்ஙனம்பருகிய
இவர் மாண்டுகிடத்தலால், இச்சுனைநீர்விஷங்கலந்திருப்பதாதல் வேண்டும்'
என்று தன்மனத்தினுள் ஊகித்தறிந்து கொண்டானென்க.            (680)