27.-வீமன்ஒருபுறம் தாகத்தாலும் மற்றொருபுறம் சோகத்தாலும்வருந்தல். பின்னவர்மூவர்சேரப் பிணங்களாய்க்கிடத்தல்கண்ட மன்னவன்தனக்குத்தாக மாறுமோவளர்ந்து மேன்மேல் என்னவன்பட்டானென்ப தியம்புதற்கெட்டுமோமுன் சொன்னவன்றானுமிந்தச்சோகமோதொகுக்கமாட்டான். |
இரண்டுகவிகள் -ஒருதொடர். (இ-ள்.)பின்னவர் மூவர் - (தன்) பின் பிறந்தவராகிய மூன்று பேரும் [அருச்சுனனும்நகுலசகதேவரும்],சேர-ஒருசேர, பிணங்கள் ஆய்- பிணங்களாகி, கிடத்தல்-கீழ்வீழ்ந்திருத்தலை,கண்ட-,மன்னவன்தனக்கு - வீமசேனனுக்கு, [அவர்கள்நீர்பருகியதனால்இறந்தாரென்று கண்டமாத்திரத்தினால்],தாகம் - நீர்வேட்கை, மாறும்ஓ - நீங்குமோ? மேன்மேல் வளர்ந்து - (நீர்வேட்கை) மிகவும் அதிகமாகவளர்ந்ததனால்,அவன் - அந்தவீமசேனன், என்பட்டான் என்பது-என்ன அவஸ்தைப்பட்டானென்பதை, இயம்புதற்கு- எடுத்துச்சொல்லுதற்கு, எட்டும்ஓ - வாசகங்கள்கிடைக்குமோ? முன் சொன்னவன் தான்உம்-(அந்த அருச்சுனன்முதலிய மூவர்க்கும்) முன்னவனாக[அண்ணனாக]க்கூறப்பட்ட அந்த வீமசேனனும், இந்த சோகம்ஓ தொகுக்கமாட்டான்-(தாகத்தோடு இந்தத் தம்பிமார் இறந்ததனாலான)சோகத்தையும் அடக்கமாட்டாதவனாய்,-(எ-று.)- 'குளிப்பாட்டினான்'என அடுத்த கவியோடு முடியும். முன்சொன்னவன் தான்உம் - முதலிற்பாண்டவசரித்திரத்தை மகாபாரதமாகக்கூறி வியாசபகவானும், இந்த சோகம்ஓ - இந்தச் சோகச்செய்தியையோ, தொகுக்கமாட்டான் - சுருக்கிச்சொல்லமாட்டான்: ஆதலால், யானும் சிறிதாவது கூறவேண்டு மென்பது குறிப்பெச்சமெனக் கூறுவாரு முளர். (681) 28.-வீமன்விழுந்துகிடக்கும் விசயனைக்கண்டு கண்ணீர்பெருக்குதல். குசையுடைப்புரவித்திண்டேர்க் குரக்குவெம்பதாகையானை அசைவில்பொற்சயிலமன்ன வாண்டகைமனத்தினானைத் திசையனைத்தினுந்தன்னாமந்தீட்டியசிலையின்வெம்போர் விசையனைத்தன்கண்ணீரான்மெய்குளிப்பாட்டினானே. |
(இ-ள்.)குசைஉடை-கடிவாளத்தையுடைய, புரவி-குதிரைகள் பூட்டிய, திண் தேர்-வலிய தேரிலே, வெம் குரங்கு பதாகை யானை-துவசத்திலே கொடிய அநுமனையுடையவனும்,அசைவு இல்பொன் சயிலம் அன்ன - அசைத்தலில்லாத பொன்மலை[மேருமலை]யையொத்த,ஆண் தகை மனத்தினானை- வீரனுக்குரியதகுதிப்பாட்டோடுகூடியமனத்தையுடையவனுமாகி, திசை அனைத்தின்உம்-திக்குகளில்எல்லாம், தன் நாமம்-தனது பெயரை, தீட்டிய |