பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்433

எழுதிவைத்துள்ள, சிலையின்வெம் போர் விசையனை-வில்லினாற்
செய்யுங்கொடிய போரில் எப்போதுஞ் சயம்பெறுபவனானஅருச்சுனனை,
தன் கண் நீரால்-தனது கண்நீரினால்,மெய் குளிப்பாட்டினான்-
உடம்பைக்குளிக்கச்செய்தான்;(எ-று.)

     குளிப்பாட்டினான்என்றவினைமுற்றிற்கு,வீமன் என்ற எழுவாய்
வருவிக்க.  விசயனை மெய்யைக் குளிப்பாட்டினான்-இரண்டு
செயப்படுபொருள்வந்த வினை. வீமசேனன், விசயனைக்குறித்துக் கண்ணீர்
பெருக்குகிறதற்குக்காரணம், பெருவீரனானஅந்த அருச்சுனன் உயிர்
சோர்ந்திருந்தமையாலாகும்.  காண்டவவனத்தை இஷ்டப்படியுண்ணுமாறு
அநுமதிதந்த அருச்சுனனிடத்து அக்கினிதேவன் மிகமகிழ்ந்து அன்போடு
வானரப்பதாகையுள்ள தேரையும் நான்குவெள்ளைக்குதிரைகளையும்
இரண்டு அம்பறாத்தூணிகளையும்வில்லையும்தந்தானென்பது, கீழ்
ஆதிபருவத்தில் வந்த வரலாறாகும். உடம்பின் தோற்றத்தோடு மனத்தின்
தன்மையினாலும்பொன்மலைபோன்றவனென்பார்,'அசைவில்
பொற்சயிலமன்ன வாண்டகைமனத்தினானை'என்றார். விசையன்-
விசயனென்பதன் போலி.

     "குரக்குவெம்பதாகையானை"என்ற தொடரில், மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்றென்க. (பதாகையில்)
வெம்குரங்கானைஎன்றுபிரித்துக்கூட்டல்.                     (682)

29.-பின்னும்வீமன் நகுலசகதேவர்களைக்
கண்டுவருந்துதல்.

நற்றுணைச்சிறுவனோடுநகுலனைநோக்கியந்தோ
எற்றுணையிழந்தேனென்னுமென்செய்வதினிநானென்னும்
முற்றுணைவனுமக்கானின்முடிந்திடுமொழியவேறோர்
பிற்றுணைகாண்கலாதேன்யாரொடுபேசுவேனே.

     (இ-ள்.) நல்துணைசிறுவனோடு-சிறந்ததுணையாகவுள்ளதம்பியாகிய
சகதேவனுடனே (உயிர்ஒடுங்கிக் கிடக்கின்ற), நகுலனை-நகுலன்
என்பவனையும்,நோக்கி - (வீமசேனன்) பார்த்து, (பெருந்துன்பமடைந்து),
'அந்தோ- ஐயோ!  என் துணைஇழந்தேன்-என்னுடைய துணையை
யிழந்தேனே!'என்னும் - என்பான்: 'இனிநான் செய்வது என் - இனி
நான் செய்யவேண்டுவது என்ன?'என்னும் - என்பான்: (பின்னும்), 'முன்
துணைவன்உம்-முற்பட்டதுணைவனாகியதருமபுத்திரனும், அ கானில்-
(அவனுள்ள) அக்காட்டில், முடிந்திடும் - (நாம் எவரும் அவனது தாகம்
தீரும்படி நீர் கொண்டு செல்லாமையால்) இறந்து விடுவான்: பின் - பிறகு,
மொழிய - பேசுமாறு, வேறு ஓர் துணைகாண்கலாதேன் - வேறு ஒருவர்
துணைவரை[உடன்பிறந்தாரை]யும்காணப்பெறாதயான், யாரொடு
பேசுவேன் - யாரோடுசம்பாஷணைசெய்வேன்
[பேசுவதற்குஒருவரும்
இல்லையே?],'(என்னும்) - என்பான்;(எ-று.)-ஏகாரம் - இரக்கம்.
முதலிரண்டடிகளில்வந்துள்ள 'என்னும்'