என்பதை 'பேசுவேனே'என்பதன்பின்னுஞ் சேர்த்து இச்செய்யுளைமுடிக்க. இதனால், வீமசேனன் தான்மாத்திரம் பிழைத்திருப்பதிற்பய னில்லைஎன்று தானும்நீர்பருகிஉயிரைநீக்கத் தீர்மானித்தமை பெறப்படும். என் + துணை=எற்றுணை. "தன்னென்னென்ப வற்றின் ஈற்றுன வன்மையோடுறழும்" என்பது, விதி. (683) 30.-வீமன்மணலில் எழுதிவிட்டு அந்தச்சுனைநீரைப் பருகுதல். மணிமுரசுயர்த்தோனீண்டு வருதலும்கூடும்வந்தால் அணிதருநச்சுத்தோய மருந்தவுங்கூடுமென்னாப் பணியுடன்செய்வான்போலப் பருமணலேட்டிற்கையால் துணிவுறவெழுதியந்தத் தோயமேதானுந்துய்த்தான். |
(இ-ள்.)'மணிமுரசு உயர்த்தோன் - அழகிய முரசவாத்தியத்தை(க் கொடியில்) உயரக்கட்டியவனாகியதருமபுத்திரன், ஈண்டு - இங்கே, வருதலும் கூடும் - (ஒருகால்) வருதல்நேரிட்டாலும்நேரிடும்: வந்தால்- (அங்ஙனம்) வந்தால், அணிதரு-(கண்களுக்கு) அழகு தருகின்ற, நஞ்சு தோயம்-விஷமுள்ள சுனைநீரை,அருந்தஉம்கூடும் - பருகுதலும் நேரிடலாம்,'என்னா- என்று (பின்னும் மனத்தினுள்) எண்ணி, (வீமசேனன்),-பருமணல் ஏட்டில்-பருத்த மணலாகிய ஏட்டிலே, கையால்- கையினால்,துணிவு-(தன்)துணிபை, உற-நன்கு விளங்குமாறு, எழுதி-, பணியுடன்-(தருமபுத்திரனது)கட்டளையினாலே,செய்வான்போல- தொழில்செய்வபன்போல, அந்த தோயம்ஏ-அந்தச்சுனையின்நீரையே, தானும்-,துய்த்தான் - பருகினான்; வீமசேனன்தான் நச்சுச்சுனையின்நீரைப்பருகிய காரணத்தை அச்சுனையின்கரையிலுள்ளமணலாகிய ஏட்டில் விளக்கமாக எழுதிவிட்டுத் தான்மாத்திரம் பிழைத்திருப்பதில் பயன் இல்லைஎன்ற கருத்தால் தானும் அந்தச்சுனையின்நச்சுநீரைமிக்கமகிழ்வொடு பருகினானென்க.வீமசேனன் நச்சுநீரைப்பருகியது தருமபுத்திரனுடைய கட்டளைஆகாதிருக்கவும், எப்போதும் தருமபுத்திரனுடையபணியைத் தவறாமல்செய்கின்ற அவ்வீமன் இப்போதுமணலேட்டில் தன் துணிபையெழுதிவிட்டு நச்சுநீரைப்பருகியது, அந்தத்தருமன் பணியை உடனேசெய்ததுபோலத் தோன்றிய தென்பார் 'பணியுடன்செய்வான்போல...தோயமே தானுந் துய்த்தான்'என்றார். கீழ் 'முன்துணைவன்கானில்முடிந்திடும்'என்று கூறிய வீமன் அவ்வாறு முடிந்திடாவிடின் இங்கேவருதலும் சுனைத்தோயத்தைப்பருகுதலும் கூடுமென்கின்றானென்க. வருதலும், அருந்தவும் என்ற உம்மைகள் - ஐயப்பொருளோடுஎச்சப்பொருளுமுடையன. (684) 31.கவிக்கூற்று. பொருப்பினும்வலியகொற்றப்புயமுடைவீமனென்றால் அருப்புடையறலினஞ்ச மஞ்சுமோவாலமென்னும் உருப்பினையறிந்தும்வாரியுண்டுதன்னுயிரும்வீந்தான் நெருப்பினுஞ்சொல்லினாவேம்நினைப்பினும்நெஞ்சம்வேமால். | |